போட்டி தேர்வர்கள்மத்திய அரசு பணிக்கு தயாராவதற்கு இலவச பயிற்சி வகுப்பு

போட்டி தேர்வர்கள்மத்திய அரசு பணிக்கு தயாராவதற்கு இலவச பயிற்சி வகுப்பு
x
தினத்தந்தி 12 May 2023 12:15 AM IST (Updated: 12 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் பணிகளுக்கான போட்டி தேர்வுக்கு போட்டி தேர்வர்கள் சிறப்பாக தயாராகும் வகையில் இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அறுவுறுத்தப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

பயிற்சி வகுப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், ரெயில்வே மற்றும் வங்கிப் பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு தேர்வர்கள் சிறப்பான முறையில் தயாராகும் வகையில் இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. இந்த பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்பட்டு மூன்று மாத காலத்திற்கு நடைபெற உள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் சிறப்பான முறையில் நிபுணத்துவம் பெற்ற பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்பட உள்ளது. தற்போது மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 7 ஆயிரத்து 500 காலிப் பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்களும் இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம்.

முன்பதிவு

இந்த பயிற்சி வகுப்பில் கலந்துக் கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 99425 03151 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்பு கொண்டு தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த பயிற்சி வகுப்புகளில் மத்திய அரசு பணிக்கு தயாராகும் தூத்துக்குடி மாவட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story