திருமணத்துக்கு பெண் பார்த்து தருவதாக கூறி ரூ.6 லட்சம் மோசடி கலெக்டரிடம், என்ஜினீயர் புகார்


திருமணத்துக்கு பெண் பார்த்து தருவதாக கூறி ரூ.6 லட்சம் மோசடி  கலெக்டரிடம், என்ஜினீயர் புகார்
x

திருமணத்துக்கு பெண் பார்த்து தருவதாக கூறி ரூ.6 லட்சம் மோசடி நடந்தது தொடர்பாக கலெக்டரிடம், என்ஜினீயர் புகார் அளித்துள்ளார்.

சேலம்

சேலம்,

சேலம் செரிரோடு பகுதியை சேர்ந்தவர் இந்திரா. இவரது மகன் தினேஷ்குமார் (வயது 25). பி.இ. என்ஜினீயரிங் முடித்துள்ளார். மலேசியாவுக்கு வேலைக்கு சென்று சமீபத்தில் சேலம் திரும்பிய அவருக்கு தாய் இந்திரா மற்றும் குடும்பத்தினர் பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அப்போது, இந்திராவின் உறவினர் ஒருவர், தினேஷ்குமாருக்கு பெண் பார்த்து தருவதாகவும், அவருக்கு அரசு வேலை வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார். அதை நம்பிய இந்திரா பல்வேறு தவணைகளாக ரூ.6 லட்சம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பெண் எதுவும் பார்த்து கொடுக்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த தினேஷ் மற்றும் அவரது தாய் இந்திரா நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர். அப்போது, கலெக்டர் கார்மேகத்தை சந்தித்து, மனு கொடுத்துவிட்டு, பெண் பார்த்து தருவதாக கூறி ரூ.6 லட்சம் மோசடி செய்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். இந்த மோசடி தொடர்பாக டவுன் போலீஸ் நிலையத்திலும் புகார் மனு அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story