குடிதண்ணீரில் கழிவுநீர் கலப்பதாக புகார்


குடிதண்ணீரில் கழிவுநீர் கலப்பதாக புகார்
x

சின்னாளப்பட்டி பகுதியில் குடிதண்ணீரில் கழிவுநீர் கலப்பதாக புகார் எழுந்துள்ளது.

திண்டுக்கல்

சின்னாளப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் வசிக்கிற மக்களுக்கு ஆத்தூர் காமராஜர் அணையில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று 10-வது வார்டு பகுதியான வி.எம்.எஸ்.காலனி பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அப்போது குடிநீருடன், கழிவுநீரும் கலந்து வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கலங்கலாக வந்த தண்ணீரில் மண்ணும் கலந்து வந்தது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த சில நாட்களாகவே குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இந்த தண்ணீரை குடிப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே குடிநீரில், கழிவுநீர் கலந்து வருவதை தடுக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்து சின்னாளப்பட்டி பேரூராட்சி சுகாதாரத்துறையினர் கூறுகையில், குடிநீர் கலங்கலாக வருவதாக புகார் வந்தது. உடனடியாக, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் உள்ள தண்ணீரை காலி செய்து தொட்டியை சுத்தப்படுத்தி விட்டோம். தண்ணீர் கலங்கலாக வருவதால் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்து வருகிறோம் என்றனர்.


Next Story