எடப்பாடி பழனிசாமி மீது புகார்


எடப்பாடி பழனிசாமி மீது புகார்
x
தினத்தந்தி 23 Aug 2023 12:15 AM IST (Updated: 23 Aug 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி மீது தி.மு.க. மகளிர் அணியினர் கொடுத்தனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி மீது தி.மு.க. மகளிர் அணியினர் கொடுத்தனர்.

தி.மு.க. மகளிர் அணி மாநில செயலாளர் ஹெலன் டேவிட்சன் தலைமையில், குமரி மாவட்ட தி.மு.க. மகளிர் அணி அமைப்பாளர் ஜெனஸ் மைக்கேல், மாநகர மகளிரணி அமைப்பாளர் அம்மு ஆன்றோ மற்றும் பலர் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கடந்த 20-ந் தேதி மதுரையில் அ.தி.மு.க. மாநாடு நடந்தது. அதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோரை அவதூறாக பாட்டுப்பாடியும், அநாகரிகமான முறையில் பேசியும் கொலை மிரட்டல் விடுத்ததை முன் வரிசையில் அமர்ந்து கைதட்டி ரசித்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மாநாட்டை நடத்திய நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து உடனடியாக கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story