ஹிஜாப் அணிந்ததால் அனுமதி மறுக்கப்பட்ட பெண் கலெக்டரிடம் புகார்
ஹிஜாப் அணிந்து இந்தித் தேர்வு எழுத வந்ததால் அனுமதி மறுக்கப்பட்டு தேர்வுக்கூடத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பெண் கலெக்டர் அலுவலகத்தல் புகார் அளித்தார்.
ஹிஜாப் அணிந்து இந்தித் தேர்வு எழுத வந்ததால் அனுமதி மறுக்கப்பட்டு தேர்வுக்கூடத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பெண் கலெக்டர் அலுவலகத்தல் புகார் அளித்தார்.
'ஹிஜாப்'
திருவண்ணாமலை கரிகாலன் தெருவை சேர்ந்த பரீத் அகமத் மனைவி ஷபானா. இவர் நேற்று முன்தினம் திருவண்ணாமலை அருகில் தனியார் பள்ளியில் இந்தி பிரசார சபா சார்பில் நடைபெற்ற இந்தி தேர்வு எழுத சென்றிருந்தார்.
இவர் 'ஹிஜாப்' அணிந்து இருந்ததால் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் ஷபானா, நேற்று முஸ்லிம் அமைப்புகளின் நிர்வாகிகளுடன் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.
பின்னர் கலெக்டர் முருகேஷிடம் அவர் புகார் மனு அளித்தார். அந்த மனுவில், ''திருவண்ணாமலை அருகில் உள்ள ஒரு கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் இந்தி பிரசார சபா சார்பில் நடைபெற்ற இந்தி தேர்வு எழுத சென்றிருந்தேன்.
அப்போது 'ஹிஜாப்' அணிந்து தேர்வு எழுதக் கூடாது என்று பள்ளி நிர்வாகத்தினர் நேரடியாகவும், இந்தி பிரசார சபா செயலாளர் செல்போன் மூலமும் தெரிவித்தனர். அப்போது நான் இந்த தேர்வை கடந்த பிப்ரவரி மாதம் 'ஹிஜாப்' அணிந்து தான் எழுதினேன்.
இப்போது மட்டும் ஏன் தடை செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவர்கள் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. மேலும் நான் 'ஹிஜாப்' இல்லாமல் தேர்வு எழுத மாட்டேன் என்று தீர்மானமாக அவர்களிடம் கூறிவிட்டேன்.
அரசியல் சாசன சட்டம்
இது போன்ற சம்பவம் நம்முடைய அரசியல் சாசன சட்டம் வழங்கியுள்ள மத சுதந்திரத்திற்கு எதிரானது. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கூறியிருந்தார்.
மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்'' என்றார்.