வள்ளலார் பற்றி தவறான தகவலை பதிவு செய்ததாக கவர்னர் மீது புகார்


வள்ளலார் பற்றி தவறான தகவலை பதிவு செய்ததாக கவர்னர் மீது புகார்
x
தினத்தந்தி 24 Jun 2023 12:15 AM IST (Updated: 24 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வள்ளலார் பற்றி தவறான தகவலை பதிவு செய்ததாக கவர்னர் மீது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் தமிழ் உணர்வாளர்கள் புகார் அளித்தனர்.

கடலூர்

கடலூர்:

தமிழ் உணர்வாளர்கள் கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வக்கீல் திருமார்பன் தலைமையில் தி.மு.க. மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் இள.புகழேந்தி, காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் வக்கீல் சந்திரசேகரன், தி.மு.க. மாநகர துணை செயலாளர் அகஸ்டின், மக்கள் அதிகாரம் பாலு உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் நேற்று கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமை சந்தித்து புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

வள்ளலாரின் 200-வது பிறந்த நாள் விழாவை தமிழக அரசு பெரிய அளவில் கொண்டாட நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தநிலையில், கடந்த 21.6.2023 அன்று தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி வடலூரில் நடந்த வள்ளலாரின் 200-வது ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு, தான் ஒரு சனாதன தர்மத்தின் மாணவர் என்றும், சனாதன தர்மத்தின் 10 ஆயிரம் ஆண்டு பாரம்பரியத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளல் பெருமான் என்றும் பேசியுள்ளார்.

கவர்னர் பொறுப்பில் இருந்து கொண்டு திட்டமிட்டு உள்நோக்கத்துடன் வள்ளலாரை பற்றி தவறான தகவலை பதிவு செய்துள்ளார். அவர் வேண்டுமென்றே சமத்துவம், சுயமரியாதை மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வள்ளலார் வழி நிற்கும் சன்மார்க்க நெறியாளர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் மனதை புண்படுத்தும் வகையில் பேசியுள்ளார். சன்மார்க்க பிரிவினருக்கு எதிரான கருத்துகளை திட்டமிட்டு உள்நோக்கத்துடன் செய்துள்ள கவர்னர் ஆர்.என். ரவி மீது உரிய சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.


Next Story