ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது புகார்


ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது புகார்
x
தினத்தந்தி 27 Sept 2022 12:15 AM IST (Updated: 27 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ரூ.8 லட்சம் மோசடி: ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது புகார்

விழுப்புரம்

விழுப்புரம்

புதுச்சேரி மாநிலம் தேங்காய்திட்டு பகுதியை சேர்ந்தவர் பாலசுந்தரம் (வயது 50). டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வரும் இவர் நேற்று விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்டுசாலை பகுதியில் வசித்து வரும் ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை என்பவரின் மருமகன் தனசேகரன் என்பவர் என்னிடம் ரூ.4 லட்சத்தை கடனாக பெற்று திரும்ப தராமல் ஏமாற்றி வந்தார். பின்னர் எனது மருமகன் ஸ்ரீதரனிடம் அவர் ரூ.4 லட்சத்தை கடனாக பெற்று அவரையும் ஏமாற்றியுள்ளார். இந்நிலையில் கடந்த 17-ந் தேதி நான், அவர்களிடம் சென்று பணத்தை கேட்டபோது ஏழுமலையும், தனசேகரனும் சேர்ந்து என்னை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து ஆரோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். ஆனால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் காவல்துறை இணையதளத்தில் புகார் செய்தேன். இருப்பினும் உரிய நடவடிக்கை இல்லை. எனவே அவர்கள் இருவரிடம் இருந்து எனக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதோடு எனக்கும், எனது மருமகனுக்கும் சேர வேண்டிய பணத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். மனுவை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு அலுவலக அதிகாரிகள், இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.


Next Story