புகார் பெட்டி
புகார் பெட்டியில் தஞ்சை மக்கள் அளித்த கோரிக்கை விவரம் வருமாறு
அடிப்படை வசதி வேண்டும்
தஞ்சை மாவட்டம் திருக்கானூர்பட்டி கிராமத்தில் தேவாரம் நகர் உள்ளது. இந்த பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனா். இந்த நிலையில் . இங்கு முறையான தெருவிளக்கு வசதி, சாலை வசதி கிடைக்காமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மின் விளக்கு வசதியில்லாததால் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் அந்த பகுதிமக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் பொதுமக்களுக்கு முழுமையான அடிப்படை வசதிகள் கிடைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-வெங்கடேசன், திருக்கானூர்பட்டி.
சாலை சீரமைக்கப்படுமா?
தஞ்சையில் இருந்து பள்ளியக்கிரஹாரம் செல்லும் பழைய திருவையாறு சாலை பராமரிப்பின்றி காணப்படுகிறது. குறிப்பாக சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும்,குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-மணிகண்டன், அய்யனாபுரம்.