புகார் பெட்டி


புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

சாலையில் திரியும் மாடுகள்

கரூர் நகரப் பகுதிகளில் பகல், இரவு நேரங்களில் மாடுகள் எப்போதும் சாலைகளில் சுற்றித்திரிந்து வருவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் சாலைகளில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் அச்சத்தில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மாடுகளின் திடீர் குறுக்கீட்டால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி சாலையில் விழுந்து படுகாயம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கரூர்.


Next Story