புகார் பெட்டி


புகார் பெட்டி
x

புகார் பெட்டி, பொதுமக்கள் குறைகள் பற்றிய பதிவுகள்.

வேலூர்

சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும்

வேலூர் கோட்டை முன்பு காந்தி சிலை உள்ளது. சிலை பாதுகாப்புக்காக அதனை சுற்றி, சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. கோட்டையை சுற்றி பார்க்க வருபவர்கள் அந்த சுற்றுச்சுவர் அருகே வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இந்த நிலையில் ஏதோ ஒரு வாகனம் அந்த சுவர் மீது மோதி உள்ளது. இதனால் சுற்றுச் சுவரில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் காந்தி சிலை சுற்றுச்சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாயவன், வேலூர்.

பிரதிபலிப்பான், வெள்ளை நிற கோடு தேவை

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து காஞ்சீபுரம், திருத்தணி, திருவள்ளூர் மற்றும் பிற ஊர்களுக்கு செல்லும் பிரதான நெடுஞ்சாலைகளின் நடுேவ பதிக்கப்பட்ட பிரதிபலிப்பான் சிதைந்து விட்டது. ெவள்ளை நிற கோடும் அழிந்து விட்டது. இதனால் இரவில் வேகமாக செல்லும் வாகனங்கள், எதிர் எதிரே வரும் வாகனங்கள் விபத்துகளில் சிக்க வாய்ப்புள்ளது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீண்டும் சாலையின் நடுேவ பிரதிபலிப்பான் பதித்து, ெவள்ளைநிற கோடு போட வேண்டும்.

-பொன்னம்பலம். அரக்கோணம்.

இடிந்து விழும் நிலையில் சத்துணவு கூடம்

திருப்பத்தூர் ஒன்றியத்தில் உள்ள பள்ளவள்ளி கிராமத்தில் நிதி உதவி பெறும் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் உள்ள சத்துணவு கூடம் மிகவும் பழுதடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. கழிப்பிட வசதி இல்லாததால் மாணவ-மாணவிகள் அவதிப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சத்துணவு மையத்தை சீரமைத்துத் தர வேண்டும்.

-ராஜேந்திரகுமார், வாணியம்பாடி.

சிறுவர் பூங்காவில் மின்விளக்கு எரியவில்லை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி புதிய பஸ் நிலையம் அருகில் சிறுவர் பூங்கா உள்ளது. இப்பூங்காவில் அதிகாலையிலும், மாலையிலும் ஆண்களும், பெண்களும் 100-க்கும் மேற்பட்டோர் நடைபயிற்சி செய்து வருகிறார்கள். இரவில் 8 மணிவரை நடைபயிற்சியில் ஈடுபடுகிறார்கள். இங்குள்ள மின் விளக்குகள் எரியாமல் நீண்ட நாட்களாக உள்ளது. எனவே, மின் விளக்குகளை எரியவிட அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.

-ஏழுமலை ஆசிரியர், வந்தவாசி.

கியாஸ் பதிவு செய்ய கட்டணமில்லா சேவை தேவை

சிலிண்டரில் சமையல் கியாஸ் தீர்ந்து விட்டால் உடனே தொலைபேசி வாயிலாக சமையல் கியாஸ் சிலிண்டர் பதிவு செய்வதற்கு நுகர்வோர்கள் தங்களின் வீட்டு தொலைபேசியையும், செல்போனையும் பயன்படுத்துகின்றனர். அவ்வாறு பயன்படுத்தப்படும் தொலைபேசி மற்றும் செல்போன் அழைப்புக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்ேபாது சமையல் கியாஸ் சிலிண்டர் விலையும், ெசல்போன் ரீசார்ஜ் கட்டணமும் உயர்ந்துள்ளது. இதனால் நுகர்வோர் பாதிப்படைந்துள்ளனர். எனவே சமையல் கியாஸ் சிலிண்டர் புக்கிங் செய்வதற்கு கட்டணமில்லா தொலைபேசி, கட்டணமில்லா செல்போன் சேவையை நுகர்வோருக்கு வழங்க வேண்டும்.

-பூங்கொடி, ராணிப்பேட்டை.

சாலையில் ஊற்றப்படும் ஓட்டல் கழிவுநீர்

வேலூர் சத்துவாச்சாரியில் கலெக்டர் அலுவலக மேம்பாலம் பகுதியில் இருந்து வேலூர் பழைய பஸ் நிலையம் நோக்கி வரும் சாலை ஓரத்தில் ஓட்டல்கள் உள்ளன. இங்கு கழிவுநீரை முறையாக அப்புறப்படுத்தாமல் சாலையில் ஊற்றுகின்றனர். இதனால் வாகனங்களில் செல்பவர்களின் மேல்பட்டும், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. ஓட்டல் கழிவுநீரை முறையாக அப்புறப்படுத்த அறிவுறுத்தி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ஜானகிராமன், சத்துவாச்சாரி.

ஏரி ஆக்கிரமிப்ைப அகற்ற வேண்டும்

சேத்துப்பட்டு தாலுகா மருத்துவம்பாடி ஊராட்சியில் பெரிய ஏரி, கண்ணாதேரி ஆகியவைகள் உள்ளன. அந்த 2 ஏரிகளை சிலர் ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளனர். சிலர் பயிர் சாகுபடி செய்ய நிலமாக பயன்படுத்தி வருகின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற ேவண்டும் என 10 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். வருவாய்த்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற முன் வர ேவண்டும்.

-ம.கி.தமிழ்செல்வன்யாதவ், மருத்துவம்பாடி.


Related Tags :
Next Story