தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
சுகாதார சீர்கேடு
ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி ஊராட்சியில் உள்ள மறவர் தெருவில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் கழிவுநீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த கழிவுநீர் கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முனியசாமி, பெருநாழி.
நாய்கள் ெதால்லை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்துவதால் பொதுமக்கள், குழந்தைகள் சாலையில் நடக்க மிகவும் அச்சப்படுகின்றனர். மேலும் நாய்கள் இருசக்கர வாகனங்களின் மீது மோதுவதால் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. எனவே சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கார்த்திகேயன், காரைக்குடி.
எரியாத தெருவிளக்கு
மதுரை மாவட்டம் 23-வது வார்டு கீழகைலாசபுரம் 2-வது தெருவில் உள்ள தெரு விளக்குகள் சரிவர எரியவில்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள பெண்கள், முதியவர்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். எனவே எரியாத தெருவிளக்குகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும். சந்தனகுமார், கீழகைலாசபுரம்.
தொற்றுநோய் பரவும் அபாயம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஒன்றியம் ஊராம்பட்டி பஞ்சாயத்திற்குட்பட்ட மாரனேரி சுப்ரமணியபுரம் காலனி கிழக்கு தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் தெருவில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள், முதியவர்கள், ஊனமுற்றோர்கள் தெருவில் நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் தேங்கி நிற்கும் மழைநீரால் தொற்றுநோய் ஏற்படும் நிலை உள்ளது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பார்களா? ெபாதுமக்கள், மாரனேரி.
நடவடிக்கை தேவை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவில் நாய்கள் சுற்றித்திரிகின்றன. தெருக்களில் சுற்றித்திரியும் நாய்கள் சாலையில் செல்லும் ெபாதுமக்கள் மற்றும் குழந்தைகளை பின் தொடர்ந்து அச்சுறுத்துகிறது. மேலும் வாகனங்களின் குறுக்கே வந்தும் விழுகிறது. எனவே இந்த பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகன், மதுரை.
குண்டும், குழியுமான சாலை
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் அஞ்சுகோட்டை ஊராட்சி கரையக்கோட்டை கிராமத்தில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றது. இதனால் சாலையில் பயணிக்க முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். ேமலும் சேதமடைந்த சாலையில் பயணிப்பதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காளைராஜன், கரையக்கோட்டை.
ஆபத்தான குழிகள்
மதுரை மாவட்டம் கூடல் நகர்-அலங்காநல்லூர் பிரதான சாலை மற்றும் பழங்காநத்தம்-திருப்பரங்குன்றம் பாலம் வரை உள்ள சாலைகளில் ஆங்காங்கே பெரிய குழிகள் உள்ளன. இந்த குழிகளினால் வாகன ஓட்டிகளுக்கு வாகனங்களை இயக்க மிகவும் சவாலாக உள்ளது. ேமலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பெரிய விபத்து ஏதும் ஏற்படும் முன்னர் இந்த சாலையை சரி செய்ய ேவண்டும்.
மனோகரன், மதுரை.
ெபாதுமக்கள் அவதி
விருதுநகர் மாவட்டம் எம்.அழகாபுரி கிராமத்தில் உள்ள மேற்குதெரு மற்றும் கடைசி தெருக்களில் போதுமான தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இன்றி சாலை இருள் சூழ்ந்து இருப்பதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். ஆதலால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாலையில் தேவையான இடங்களில் தெருவிளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ெபாதுமக்கள், எம்.அழகாபுரி.
பஸ் வசதி
மதுரை மாவட்டம் திருமங்கலம்-சோழவந்தான் இடையே ேபாதுமான பஸ்கள் இயக்கப்படாததால் மாணவ-மாணவிகள் உள்பட அனைவரும் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே திருமங்கலம்-சோழவந்தான் இடையே கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்.
ெபாதுமக்கள், மதுரை.