தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
பஸ்நிலையம் பயன்பாட்டுக்கு வருமா?
மதுைர மாவட்டம் சோழவந்தான் பகுதியில் புதிதாக பஸ் நிலையம் கட்டப்பட்டது. ஆனால் இந்த பஸ் நிலையம் இன்னும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. பஸ் நிலையம் பயன்பாட்டிற்கு வந்தால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே இந்த பஸ் நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகவேல், சோழவந்தான்.
போக்குவரத்து நெரிசல்
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் சிலர் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும் சாலையில் நடந்து செல்பவா்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்து ெநரிசலை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், தொண்டி.
புகார் பெட்டி எதிரொலி
மதுரை மாவட்டம் சோழவந்தான் மேலக்கால் மெயின் ரோட்டில் பள்ளியின் அருகே வாகனங்கள் வேகமாக செல்வதால் வேகத்தடை அமைக்க வேண்டுமென "தினத்தந்தி"யில் புகார்பெட்டியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மேற்கண்ட பகுதியில் தேவையான இடங்களில் வேகத்தடை அமைத்தனர். இதுகுறித்து செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
ராஜன், கோச்சடை.
தூர்வாரப்படாத குளம்
ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் மகா காளியம்மன் கோவிலின் அருகே உள்ள குளம் நீண்ட நாட்களாக தூர்வாரப்படாமல் உள்ளது. மேலும் படித்துறைகளும் சேதமடைந்து காணப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் குளிப்பதற்கு இந்த குளத்தை தான் நம்பியுள்ளனர். எனவே பக்தர்களின் நலன் கருதி இந்த குளத்தை தூர்வாரவும், சேதமடைந்த படித்துறையை சீரமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவா, நயினார்கோவில்.
ஆபத்தான கிணறு
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே ராஜகோபாலபுரம் கிராமத்தில் பயன்பாடின்றி பாழடைந்து புதர் மண்டிய நிலையில் கிணறு உள்ளது. இந்த கிணற்றின் சுற்றுச்சுவரின் உயரம் குறைவாக உள்ளதால் இந்த பகுதியில் உள்ள சிறுவர்கள் மற்றும் கால்நடைகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விபரீதம் எதுவும் நிகழும் முன் இந்த கிணற்றை சுற்றி தடுப்பு வேலி அமைக்க வேண்டும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ெபாதுமக்கள், ராஜகோபாலபுரம்.
வீணாகும் குடிநீா்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் 2-வது வார்டு ரைட்டன்பட்டியில் கடந்த சில நாட்களாக குடிநீா் குழாய் உடைந்து வீணாக வாருகாலில் செல்கிறது. இதனால் குடிநீர் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சதீஸ், ஸ்ரீவில்லிபுத்தூா்.
ரேஷன் கடை வேண்டும்
மதுரை மாநகராட்சி 23-வது வார்டு கீழகைலாசபுரம், தாகூர் நகர் கண்மாய்கரை பகுதியில் 2 ஆயிரம் குடும்பங்களுக்கும் ேமற்பட்டவா்கள் வசித்து வருகின்றனா். இருப்பினும் இங்கு ரேஷன் கடை இல்லை. இதனால் ரேஷன் பொருட்கள் வாங்க முதியோர்கள், பெண்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்தபகுதியில் ரேஷன் கடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
சந்தனகுமார், கீழகைலாசபுரம்.
சுகாதார சீர்கேடு
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் கூமாப்பட்டியிலிருந்து கான்சாபுரம் செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. இந்த சாலை திறந்தவெளி கழிவறை போல காட்சியளிக்கிறது. பொதுக்கழிவறை இருந்தும் அதை பொதுமக்கள் பயன்படுத்துவதில்லை. இந்நிலை தொடர்ந்தால் நோய் பரவும் அபாயம் ஏற்படும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுகாதார சீர்கேட்டை சரிசெய்ய வேண்டும்.
பொதுமக்கள், கூமாப்பட்டி.
காற்றுமாசு
மதுரை நிலையூர் கைத்தறிநகா் பகுதியில் சாலையோரத்தில் குப்பை கொட்டப்படுவதால் அந்த இடமே குப்பை மேடாக காட்சியளிக்கிறது. மேலும் குப்பைகள் எரிக்கப்படுவதால் அப்பகுதி முழுவதும் புைகமூட்டமாக காட்சியளிப்பதுடன் காற்று மாசுபாடு ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் திறந்தவெளியில் குப்பை கொட்டப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கண்ணாயிரமூர்த்தி, மதுரை.