தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

புகார் பெட்டி

மதுரை

ஆபத்தான மின்கம்பி

ராமநாதபுரம் மாவட்டம் கொக்கூரணி பகுதியில் உள்ள ஒரு மின்கம்பத்தில் மின்கம்பி அறுந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. மின்கம்பியை அகற்றுவார்களா?

அந்தோணிசாமி, கொக்கூரணி.

கொசுத்தொல்லை

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் கொசுத்தொல்லை அதிகரித்து உள்ளது. கொசுக்கடியால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். நடவடிக்கை எடுப்பார்களா?

காதர்மீரா, ஆர்.எஸ்.மங்கலம்.

மின்விசிறி தேவை

சிவகங்கை மாவட்டம் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் அன்னதான கூடத்தில் போதிய மின்விசிறி இல்லை. இதன் காரணமாக பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், தாயமங்கலம்.

குண்டும், குழியுமான சாலை

மதுரை கீரைத்துறை-அனுப்பானடி ஹவுசிங்போர்டு செல்லும் வழியில் ரெயில்வே கேட் பகுதிக்கு முன்பு உள்ள சாலையானது குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதன் காரணமாக இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரத்தில் பள்ளம், மேடு இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?

மணிராம் கார்த்திக், அனுப்பானடி.

சுவரொட்டிகள்

மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் யானைக்கல் பாலத்தின் வெளிப்புறத்தில் பல வர்ணம் பூசப்பட்டு உள்ளது. ஆனால் தற்ேபாது பாலத்தில் பல பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் வர்ணம் மறைக்கப்பட்டு பாலத்தின் அழகு குறைந்து வருகிறது. எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவா, மதுரை.

எரியாத தெருவிளக்குகள்

மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் இரவு நேரத்தில் தெருவிளக்குகள் எரிவதில்லை. இதனால் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். இருட்டை பயன்படுத்தி சமூக விரோதிகள் குற்ற செயல்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. எனவே, இப்பகுதியில் எரியாத தெருவிளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

ராஜசேகர், மதுரை.

மின்விளக்குகள் அமைக்கப்படுமா?

மதுரை மாவட்டம் கோச்சடை பகுதியில் உள்ள மின்கம்பங்களில் தெருவிளக்குகள் இல்லை. இதன் காரணமாக அப்பகுதியை சேர்ந்த பெண்களும், சிறுவர், சிறுமிகளும் இரவில் வெளியே செல்ல அச்சம் அடைகின்றனர். மக்களின் நலன்கருதி இங்கு தெருவிளக்குகள் அமைக்கப்படுமா?

ராஜன், கோச்சடை.


Next Story