'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
மயிலாடுதுறை
'தினத்தந்தி' புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
வீணாகும் குடிநீர்
மயிலாடுதுறை மாவட்டம் சோழசத்திரநல்லூர் அருகே நத்தம் பொன்னுக்குடி கிராமத்தில் பொதுமக்கள் வசதிக்காக குடிநீர்குழாய் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் குழாய் முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் குழாயில் இருந்து குடிநீர் வெளியேறி வீணாக செல்கிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் நீர் தேங்குவதால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள குடிநீர் குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-நாதன், செம்பனார்கோவில்.
Related Tags :
Next Story