புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
`தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
புகாருக்கு உடனடி தீர்வு
தூத்துக்குடியில் பீச் ரோடு பாரத ஸ்டேட் வங்கி அருகில் பள்ளம் இருந்தது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக `தினத்தந்தி' புகார் பெட்டிக்கு வாசகர் கருணாமூர்த்தி அனுப்பிய பதிவு பிரசுரம் ஆனது. இதில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பள்ளத்தை சீரமைத்துள்ளனர். இதற்காக `தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.
குடிநீர் குழாய் அருகே சாக்கடை
நெல்லை மாவட்டம் பழவூர் கிழக்கு பகுதி அம்மன் கோவில் தெருவில் சாக்கடை கால்வாய் அருகில் குடிநீர் குழாய் அமைந்துள்ளது. அந்த இடத்தில் பொதுமக்கள் குடங்களை வைத்து குடிநீர் பிடித்து செல்கிறார்கள். சாக்கடை கால்வாய் அருகில் இருக்கும் குடிநீர் குழாயை மாற்றி அமைக்க கேட்டுக்கொள்கிறேன்.
-ராம்சுந்தர், பழவூர்.
தெருவிளக்குகள் எரியுமா?
மேலப்பாளையம் பகுதி 31-வது வார்டு கீழவீரராகவபுரத்தில் கடந்த சில நாட்களாக தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் அந்த பகுதி இரவில் இருளில் மூழ்குகிறது. இரவில் மக்கள் நடமாட அச்சப்படுகிறார்கள். எனவே, தெருவிளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நாதன், கீழவீரராகவபுரம்.
தேங்கும் கழிவுநீர்
மூலைக்கரைப்பட்டியில் நெல்லை மெயின்ரோட்டில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே, கழிவுநீர் தேங்காதபடி நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
-மாரிமுத்து, மூலைக்கரைப்பட்டி.
வீணாகும் குடிநீர்
நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 27-வது வார்டு அலுவலக உதவியாளர் குடியிருப்பு பகுதியில் குடிநீர் வினியோகிக்கும்போது நீர்கசிவு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. இதை சரி செய்ய வேண்டுகிறோம்.
-முகம்மது ரிபாய், பாளையங்கோட்டை.
வேகத்தடைக்கு வர்ணம் இல்லை
தென்காசி மாவட்டம் கடையம் பஸ் நிலையத்துக்கு உள்ளே செல்லும் வழியிலும், வெளியே செல்லும் வழியிலும் உள்ள வேகத்தடையில் வர்ணம் பூசப்படவில்லை. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் வேகத்தடை இருப்பது தெரியாமல் நிலைதடுமாறி விழுந்து காயம் அடைகிறார்கள். வாகன ஓட்டிகன் நலன் கருதி வேகத்தடைகளில் வர்ணம் பூச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
-திருக்குமரன், கடையம்.
குடிநீர் பிரச்சினை
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் 1-வது வார்டில் குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. இதனால் மக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். பெரும்பாலான மக்கள் ஆற்றுக்கு சென்று தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்துகிறார்கள். எனவே, குடிநீர் பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
-ராஜா, ஸ்ரீவைகுண்டம்.
ரேஷன் கடை அமைக்கப்படுமா?
வல்லநாடு அருகே ஹமீதியா நகரில் ரேஷன் கடையானது பழைய குடிநீர் தொட்டி மோட்டார் அறையில் இயங்கி வருகிறது. எனவே, புதிய ரேஷன் கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெய்னுலாப்தீன், வல்லநாடு.
எரியாத உயர்கோபுர மின்விளக்கு
கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் சத்திரம் முகப்பு நான்குரோடு சந்திக்கும் இடத்தில் உயர்கோபுர மின் விளக்கு கடந்த சில நாட்களாக எரியவில்லை. இதனால் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து எரிய செய்ய வேண்டும்.
-பாலமுருகன், கோவில்பட்டி.
கழிவுநீரால் சுகாதாரக்கேடு
செய்துங்கநல்லூர் சுடலை கோவில் ெதருவில் சாக்கடை நீர் தெருவில் ஓடுகிறது. குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதை சரிசெய்ய வேண்டும்.
-சங்கர், செய்துங்கநல்லூர்.