புகார் பெட்டி


புகார் பெட்டி
x

புகார் பெட்டி

கன்னியாகுமரி

சாலையை சீரமைக்க வேண்டும்

பேயன்குழியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் பின்புறம் உள்ள சாலை சேதமடைந்து தார்சாலை என்பதற்கான அடையாளங்களின்றி காணப்படுகிறது. மேலும், சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் ஓடையில் புற்கள் வளர்ந்து காணப்படுகிறது. எனவே, கழிவுநீர் ஓடையில் வளர்ந்துள்ள புற்களை அகற்றி சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

-ரதீஷ், வெட்டுவிளை.

சேதமடைந்த மின்கம்பம்

ஐரேனிபுரம் பகுதியில் வயக்கவிளை தெற்கு கரை செல்லும் சாலையில் கால்வாய் ஓரத்தில் ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் சேதமடைந்து சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் சரிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜே.எஸ்.ஸ்டீபன், ஐரேனிபுரம்.

சுகாதார சீர்கேடு

தர்மபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட திக்கிலான்விளையில் தனியார் கோழிப்பண்ணை செயல்பட்டு வருகிறது. கோழிக்கழிவுகளால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, கோழிப்பண்ணையை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆனந்த், திக்கிலான்விளை.

மின்கம்பம் மாற்றப்படுமா?

குளச்சல் மாதா காலனி பகுதியில் அமைந்துள்ள ஒரு மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து சேதமடைந்து காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் முறிந்து அந்த வழியாக செல்வோர் மீது விழுந்து உயிரிழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை நடுவார்களா?.

-அருள் ஷீலி, குளச்சல்.

பொதுமக்கள் அவதி

தேரேகால்புதூர் எஸ்.பி. காலனியில் ஒரு கல்லூரியின் பின்புறம் டிரான்ஸ்பார்மர் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் இரவு 10 மணி முதல் மிக குறைவான அழுத்தத்தில் மின்சாரம் வீடுகளுக்கு செல்கிறது. இதனால், அந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, டிரான்ஸ்பார்மரை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தயானந்தன், எஸ்.பி.காலனி.

விபத்து அபாயம்

கீழ ஆசாரிபள்ளம் கால்வாய் கரையோரம் எப்.ஐ.89 எண் கொண்ட மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் கால்வாய்க்குள் சரிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மின்கம்பத்தை அந்த இடத்தில் இருந்து அகற்றி பாதுகாப்பான இடத்தில் நடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆ.ஆன்டணி சதீஷ், ஆசாரிபள்ளம்.

எரியாத விளக்கு

நாகர்கோவில், வடசேரி பஸ்நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள விளக்கு பழுதடைந்து எரியாமல் காணப்படுகிறது. இதனால், அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பழுதடைந்த விளக்கை அகற்றி விட்டு புதிய விளக்கை பொருத்தி எரியவைக்க அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

-டி.ஜோணி, ஆரல்வாய்மொழி.


Next Story