'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திண்டுக்கல்

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பேனரால் பயணிகள் அவதி

பட்டிவீரன்பட்டி அண்ணாநகர் பஸ் நிறுத்தம் அருகே பெரிய அளவிலான பேனர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பேனர் பஸ் நிறுத்தத்தை மறைக்கும் வகையில் உள்ளது. இதனால் அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே பேனரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரமேஷ்பாபு, பட்டிவீரன்பட்டி.

தெருவிளக்கு வசதி வேண்டும்

ஆத்தூர் தாலுகா அய்யம்பாளையம் ஈஸ்வரன் கோவில் தெருவில் தெருவிளக்கு வசதி செய்யப்படவில்லை. இதனால் இரவில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் சமூக விரோத செயல்களும் அரங்கேறுகிறது. எனவே தெருவிளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜன், அய்யம்பாளையம்.

தெருநாய்கள் தொல்லை

திண்டுக்கல் மேட்டுப்பட்டி விரிவாக்க பகுதியில் இரவில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. நடந்து செல்பவர்கள், வாகனங்களில் செல்பவர்கள் என அனைவரையும் தெருநாய்கள் துரத்திச்சென்று கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் இரவில் வீட்டைவிட்டு வெளியே வரவே அச்சப்படுகின்றனர். எனவே தெருநாய்களை பிடித்து அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெயசீலன், மேட்டுப்பட்டி.

நடைபாதையில் பள்ளம்

தேனி நகர் பகுதியில் உள்ள சாலையோரங்களில் பொதுமக்கள் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்ட நடைபாதை உள்ளது. இதன் அடியில் சாக்கடை கால்வாய் செல்கிறது. கால்வாய் அடைப்பை சரிசெய்வதற்காக அவ்வப்போது இந்த நடைபாதையில் பள்ளங்கள் தோண்டப்படும். ஆனால் அதன் பிறகு முறையாக அந்த பள்ளம் மூடப்படுவது இல்லை. இதனால் நடைபாதையில் ஆங்காங்கே பள்ளங்களாக காட்சியளிக்கிறது. பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். எனவே பள்ளங்களை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.

-வீரகுரு, அல்லிநகரம்.

பஸ் நிலைய ஆக்கிரமிப்பு

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் பழனி செல்லும் பஸ்கள் நிறுத்துமிடம் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. இதனால் ரேக்குகளில் பஸ்களை நிறுத்த முடிவதில்லை. பயணிகளும் பஸ்சில் ஏற பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் பயணிகள் ஓய்வு அறைக்கு செல்ல பாதை வசதி இல்லை. இதனால் பயணிகள் ஓய்வெடுக்க முடியாமல் தவிக்கின்றனர். எனவே பஸ் நிலைய ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-பொதுமக்கள், திண்டுக்கல்.

------------

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.


Next Story