தினத்தந்தி புகார் பெட்டி
புகார் பெட்டி
ஆக்கிரமிக்கப்பட்ட மயான சாலை
மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டம் கள்ளிக்குடி அருகே உள்ளது பொட்டல்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 50 வருடங்கள் பயன்பாட்டில் இருந்த மயான சாலையினை ஆக்கிரமைப்பு செய்து மயான பாதையினை மேற்கொண்டு சீரமைக்க விடாமலும், சாலையின் முள் வேலி அமைத்தும் வருகின்றனர். இதனால் இப்பகுதி பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே ஆக்கிரமைப்பை அகற்றி மயான சாலையினை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெய பிரகாஷ், பொட்டல்பட்டி.
பாதாள சாக்கடை சேதம்
மதுரை மாநகராட்சி 2-வதுவார்டு கீழகைலாசபுரம் 2-வதுதெரு பகுதியில் சுமார் 20 குடும்பங்கள் உள்ளன. இந்நிலையில் இந்தப்பகுதியில் அமைந்துள்ள பாதாள சாக்கடை சேதமாகி உள்ளது. இதனால் சாக்கடை நீர் வெளியேறி சாலையில் ஓடுகிறது. ஆகவே அதை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சந்தனகுமார், கீழகைலாசபுரம்.
பஸ் இயக்கப்படுமா?
மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் பஸ் நிலையத்திற்கு பல்வேறு ஊர்களில் இருந்து மக்கள் வருகின்றனர். ஆனால் ரெயில் நிலையம் செல்ல நகர பஸ்கள் அதிக அளவில் இல்லாததால் ஆட்டோவிற்கு அதிக கட்டணம் செலுத்தி செல்கின்றனர். எனவே ரெயில் நிலையம் செல்ல பஸ்களை இயக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லட்சுமணன், ஆரப்பாளையம்.
சாலை ஆக்கிரமிப்பு
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நீரேத்தான் 7 -வது வார்டு பால் பண்ணை ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தச்சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்கள் சாலையின் குறுக்கே அடிக்கடி பாய்வதால் விபத்துகள் நடைபெற்று வருகிறது. மேலும் பெண்கள், குழந்தைகள், மற்றும் பொது மக்கள் இரவு 7 மணிக்கு மேல் இந்த சாலையில் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். இந்த சாலையில் பள்ளியும் இயங்கி வருவதால் மாணவர்களும் பெற்றோர்களும் இந்த சாலையில் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் இந்த சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும்.
ராம், வாடிப்பட்டி.
வழிந்தோடும் கழிவுநீர்
மதுரை மாவட்டம் திருமங்கலம் பெரியகடை வீதி அருகே பள்ளி செல்லும் மாணவிகளுக்கு இடையூறாக கடந்த சில நாட்களாக சாக்கடை நீர் வழிந்தோடி வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு மூலம் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், திருமங்கலம்.