புகார் பெட்டி


புகார் பெட்டி
x

புகார் பெட்டி

கன்னியாகுமரி

வீணாகும் குடிநீர்

நாகர்கோவிலில் இருந்து மணக்குடி வழியாக கன்னியாகுமரி செல்லும் நெடுஞ்சாலையில் புத்தளம் பகுதியில் கூட்டுக்குடிநீர் திட்டத்துக்காக குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சாலையில் வீணாக பாய்கிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, குழாய் உடைப்பை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சோபி, புத்தளம்.

போக்குவரத்துக்கு இடையூறு

நாகர்கோவில் பால்பண்ணை சந்திப்பில் இருந்து வாட்டர் டேங்க் ரோடு செல்லும் சாலையின் திருப்பம் உள்ளது. இந்த திருப்பத்தில் மாலை நேரங்களில் சிலர் கடைகளை வைத்துள்ளனர். இதனால், கடைகளுக்கு வருபவர்கள் சாலையிலேயே வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், விபத்துகள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, அந்த பகுதியில் சாலையில் வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராபின், சைமன் நகர்.

விபத்து அபாயம்

அழகப்பபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட மீன்சந்தையில் இருந்து வளன் நகர் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு கம்பத்தில் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகனங்கள், நடை பயிற்சிக்காக செல்லும் பொதுமக்கள் மீதும் மின்கம்பி உரசி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, வாகன ஓட்டிகள், பாதசாரிகள் நலன் கருதி தாழ்வாக ெசல்லும் மின்கம்பிகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜஸ்டின், அழகப்பபுரம்.

மின்விளக்கு அமைக்க வேண்டும்

அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்கு உட்பட்ட சந்தையடி கிராமத்தில் நாகர்கோவில்-கன்னியாகுமரி ெரயில் தண்டவாளத்தின் வடக்கு பகுதியில் இடையன்விளைக்கு ஒரு சாலை செல்கிறது. இந்த சாலையில் மின்விளக்குகள் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி அந்த சாலையோரத்தில் கம்பங்கள் அமைத்து மின்விளக்கு பொருத்தி எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராமதாஸ், சந்தையடி.

எரியாத விளக்கு

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட சரக்கல்விளை கால்வாய்க்கரையில் 468 எண் கொண்ட ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்கு பழுதடைந்து எரியாமல் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பழுதடைந்த விளக்கை அகற்றி விட்டு புதிய மின்விளக்கை பொறுத்தி எரிய வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆன்றோ டெகோசிங் ராஜன், வேதநகர்.

மரண பள்ளம்

நாகர்கோவில் மணியடிச்சான் கோவிலில் இருந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் குடிநீர் குழாய் பதிக்கப்பட்ட இடத்தில் சாலை சேதமடைந்து மரண பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு போக்குவரத்துக்குஇடையூறு ஏற்படுவதுடன், அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பள்ளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜ்பாலு, நாகர்கோவில்.

வடிகால் ஓடை அமைக்கப்படுமா?

நுள்ளிவிளை பஞ்சாயத்து க்கு உட்பட்ட பேயன்குழி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகில் உள்ள சாலையில் மழைநீர் வடிகால் ஓடை அமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், மழை நேரங்களில் அந்த சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த சாலையில் வடிகால் ஓடை அமைக்கப்படுமா?.

-சுபின் ஜி, பேயன்குழி.


Next Story