தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

புகார் பெட்டி

ராமநாதபுரம்

கண்மாய் தூர்வாரப்படுமா?

ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.காவனூர் கண்மாய் தூர்வாரப்படாமல் உள்ளது. கண்மாயை கருவேல மரங்கள் அதிக அளவில் ஆக்கிரமித்துள்ளது. தற்போது மழை காலம் என்பதால் கண்மாய்க்கு நீர் வரத்து அதிகரித்து காணப் படுகிறது. இந்த கண்மாயில் நீரை சேமிப்பதன் மூலம் பல ஏக்கர் நிலம் பாசனவசதி பெறும். எனவே கண்மாயை விரைந்து தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பழனி, ராமநாதபுரம்.

தடுப்பணை கட்டித்தருவார்களா?

ராமநாதபுரம் மாவட்டம் சேதுக்கரை அருகே கொட்டகுடி ஆற்றில் கடல் நீர் புகுவதை தடுத்து மழை நீரை தேக்கி வைக்க தடுப்பணை கட்ட வேண்டும்.இந்த ஆற்றில் மழை நீரை தேக்குவதன் மூலம் சேதுக்கரை, சின்னக்கோயில், மேலப்புதுக்குடி, கோரைக்குட்டம், பிரச்சாவலசை உள்ளிட்ட கிராமங்கள் நீர் வரத்து பெறும். மேலும் இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்ய முடியும். எனவே மழை நீரை சேமிக்க தடுப்பணை கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள், ராமநாதபுரம்.

சேதமடைந்த அலுவலக கட்டிடம்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேருராட்சி செயல் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் தபால் அலுவலகம் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் இங்கு பணிபுரியும் அலுவலர்கள், பொதுமக்கள் ஒருவித அச்ச உணர்வுடனே வந்து செல்கின்றனர். கட்டிடத்தின் சுவற்றில் கீறல்கள் ஏற்பட்டு, சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து காணப்படுகிறது. எனவே கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கார்மேகம், மண்டபம்.

கரடு முரடான சாலை

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றியம் சுவாத்தான் கிராமத்தில் உள்ள சாலை சேதமடைந்து கரடு முரடாக காட்சியளிக்கிறது. சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் அவதியடைகின்றனர். சாலையில் உள்ள பள்ளத்தில் சிக்கி வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இந்த சாலையே இப்பகுதி மக்களின் முக்கிய பிரதான சாலையாகும். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெயசந்திரன், ராமநாதபுரம்

நாய்கள் தொல்லை

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா எஸ்.பி. பட்டினத்தில் தெருநாய்கள் சாலையில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் சாலையில் நடக்க, வாகனங் களில் பயணிக்க முடியாமல் பொதுமக்கள் அவதியடை கின்றனர். மேலும் வாகனஓட்டிகளின் வாகனங்களின் மீது நாய்கள் மோதுவதால் விபத்து நடக்கிறது. எனவே சாலையில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப் ்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உசேன், திருவாடானை.


Next Story