தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

புகார் பெட்டி

சிவகங்கை

விபத்து அபாயம்

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் இருந்து மாந்தாளி செல்லும் சாலை சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. சாலையில் பயணிப்பதால் வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். பள்ளி-கல்லூரி மாணவர்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் அதிகம் பயணிக்கும் இந்த சாலையில் அவர்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலா, காளையார்கோவில்.

முன்னறிவிப்பின்றி நிறுத்தப்படும் மின்சாரம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நாட்டார் மங்கலம் கிராமத்தில் தொடர்ந்து முன்னறிவிப்பின்றி மின்தடை ஏற்படுகிறது. குறைந்த அளவு மட்டுமே மின்அழுத்தம் உள்ளதாலும் தண்ணீர் எடுக்க பயன்படுத்தப்படும் மோட்டார் முதல் எலக்ட்ரானிக் பொருட்கள் அனைத்தும் சேதம் அடைகிறது. மேலும் தொடர் மின்தடையால் இப்பகுதி மக்களின் குடிசை தொழில், விவசாயம் போன்றவை பாதிக்கப்படுகிறது. எனவே தொடர் மின்தடையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள், சிவகங்கை.

கழிப்பிட வசதி வேண்டும்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி கண்மாய்கரை பஸ் நிலையத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் கழிப்பிட வசதி இல்லை. இதனால் நெடுதூரம் சென்று கழிப்பறையை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் குறிப்பாக பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி பஸ் நிலையத்தில் கழிப்பறை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்துல் மாலிக், இளையான்குடி.

சாலை சீரமைக்கப்படுமா?

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பெரியார்சிலையில் இருந்து 5 விளக்கு பகுதி வரை சாலை விரிவாக்க பணிக்காக சாலையில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டது. இந்த கற்கள் சாலை முழுவதும் பரவி அந்த பகுதி முழுவதும் புழுதியை ஏற்படுத்துகிறது. இதனால் சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் அவதியடைகின்றனர். எனவே உடனடியாக இந்த சாலையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்துல், காரைக்குடி.

ஒளிரும் மின்விளக்கு அமைக்கப்படுமா?

சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஒன்றியம் புழுதிபட்டி சத்திரம், மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இந்த சாலையை கடக்க முயற்சி செய்யும் போது அதிக அளவில் விபத்து ஏற்படுகிறது. மேலும் இருள்சூழ்ந்து காணப்படுவதால் திருட்டு சம்பவங்களும் நிகழ வாய்ப்பு உள்ளது. இதனால் இப்பகுதியில் ஒளிரும் மின் விளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுதர்சனம், எஸ்.புதூர்.


Next Story