புகார் பெட்டி


புகார் பெட்டி
x

புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

மதுரை

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

நூலக வசதி வேண்டும்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தென்கரை கிராமத்தில் நூலக வசதி இல்லை. இதன் காரணமாக இப்பகுதி பள்ளி-கல்லூரி மாணவர்கள், போட்டித் தேர்வுகளுக்கு தயாராவோர் அதிக அளவில் சிரமப்படுகின்றனர். இவர்கள் அருகில் உள்ள கிராமத்தில் உள்ள நூலகங்களுக்கு சென்று பயின்று வருகின்றனர். எனவே இக்கிராமத்தில் நூலகம் அமைத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கவுரிநாதன், சோழவந்தான்.

சேறும், சகதியுமான சாலை

மதுரை சித்திரகார தெரு பகுதியில் தார் சாலை இல்லாமல் மண் சாலையாகவே உள்ளது. தற்போது பெய்த மழையின் காரணமாக சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. மேலும் வாகன ஓட்டிகள் சேற்றில் சிக்கி நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இப்பகுதியில் தார் சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சந்தனகுமார், மதுரை.

சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடம்

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கொட்டாம்பட்டி வடக்கு ஒன்றியம் பாண்டாங்குடி கிராமத்தில் உள்ள ரேஷன் கடை கட்டிடம் சேதமடைந்து காணப்படுகிறது. கட்டிடத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து உள்ளது. இதனால் இங்கு வருவோர் ஒருவித அச்ச உணர்வுடனே வந்து செல்கின்றனர். எனவே சேதமடைந்த கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முருகேசன், மேலூர்.

பஸ் பயணிகள் அவதி

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து சோழவந்தான் தென்கரை, முள்ளிப்பள்ளம், மண்ணாடிமங்கலம் வழியாக நிலக்கோட்டை வரை இயக்கப்படும் ஒரு சில பஸ்கள் பயணிக்க முடியாத வகையில் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பஸ்களில் பயணிக்கும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த வழித்தடத்தில் இயங்கும் பஸ்களை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், மதுரை.

எரியாத மின்விளக்கு

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா எழுமலை அருகே டி.கிருஷ்ணாபுரம் 6-வது வார்டில் உள்ள தெருவிளக்கு எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் இருட்டை பயன்படுத்தி வழிப்பறி போன்ற சம்பவங்களும் நிகழ வாய்ப்பு உள்ளது.எனவே மின்விளக்கை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முத்துபாண்டி, பேரையூர்.


Related Tags :
Next Story