தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

புகார் பெட்டி

ராமநாதபுரம்

அடிப்படை வசதி தேவை

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் எம்.எஸ்.புதுக்குடியிருப்பு பகுதியில் முறையான சாலைவசதி மற்றும் குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், எம்.எஸ்.புதுக்குடியிருப்பு.

ஆபத்தான மின்கம்பம்

ராமநாதபுரம் மாவட்டம் ராஜசிங்கமங்களம் ஒன்றியம் அறநூற்றிமங்களம் பஞ்சாயத்து மேட்டுக்கற்களத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள மின்கம்பம் மிகவும் மோசமான நிலையில் சேதமடைந்து உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும்.

வன்மிகநாதன், ராஜசிங்கமங்கலம்.

பயணிகள் நிழற்குடை வேண்டும்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா பொக்கனாரேந்தல் கிராமத்தில் 400 -க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இந்த பகுதியில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் வெயிலிலும், மழையிலும் பஸ்சிற்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் புதிதாக பயணிகள் நிழற்குடை கட்டித்தர வேண்டும். வைத்தியநாதன், முதுகுளத்தூர்.

மின்விளக்கு வேண்டும்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள வாரச்சந்தை பகுதி முழுவதும் போதிய மின் விளக்குகள் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனை பயன்படுத்தி இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடக்கிறது. எனவே இந்த பகுதியில் கூடுதல் மின்விளக்குகள் அமைத்து தர வேண்டும்.

குமார், பரமக்குடி.

நடவடிக்கை தேவை

ராமநாதபுரம் பரமக்குடி நகராட்சி பகுதியில் நடைபெறும் திட்டப்பணிகள் தரமான முறையில் நடக்கிறதா என்று அதிகாரிகள் கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பரமக்குடி.


Next Story