புகார்பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
விபத்து அபாயம்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் உள்ள சில சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். விபத்து அபாயம் உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே, சாலையை சீரமைக்க வேண்டும்.
பொதுமக்கள், திருவாடானை.
சுகாதார சீர்கேடு
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் சில இடங்களில் ஆங்காங்கே சாலை ஓரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளன. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடாக உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?
பொதுமக்கள், சாயல்குடி.
கொசுத்தொல்லை
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் கொசுக்களினால் டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் கொசு மருந்து அடித்து கொசுக்களை ஒழிக்க வேண்டும்.
பொதுமக்கள், ஆர்.எஸ்.மங்கலம்.
சேதமடைந்த நூலகம்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள நூலகம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. மேலும் இந்த நூலகம் வாடகை கட்டிடத்தில் இயங்கும் நிலை உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள வாசகர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த நூலகத்தை சீரமைக்க வேண்டும்.
ரெபா, முதுகுளத்தூர்.
ரேஷன்கடை தேவை
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா எம்.எஸ்.புதுக்குடியிருப்பில் 350-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு ரேஷன் கடை இல்லை. இதனால் இவர்கள் பல கிலோ மீட்டர் சென்று ரேஷன் பொருட்களை வாங்குகின்றனர். இதனால் பெண்கள், முதியவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் ரேஷன் கடை கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கடலாடி.