புகார் பெட்டி


புகார் பெட்டி
x

புகார் பெட்டி

கன்னியாகுமரி

மின்கம்பம் அகற்றப்பட்டது

நாகர்கோவில் மாநகராட்சி உட்பட்ட வட்டகரை பாலத்திற்கு வடக்கு பகுதியில் ஒரு துணிக்கடை அருகில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் சாலையில் சாய்ந்து விழுந்து விபத்தை ஏற்படுத்தும் வகையில் ஆபத்தான நிலையில் காணப்பட்டது. இதுபற்றி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையோரம் ஆபத்தான நிலையில் நின்ற மின்கம்பத்தை அகற்றினர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

நாய்கள் தொல்லை

மார்த்தாண்டத்தில் குழித்துறை ரெயில் நிலையம் உள்ளது. மார்த்தாண்டம் சுற்றுவட்டார பகுதிைய சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் தினமும் ரெயில் நிலையத்துக்கு வந்து வேலைக்காக வெளியூர் சென்று வருகின்றனர். இந்த ரெயில் நிலையத்தில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதனால், நிலையத்துக்கு வரும் பயணிகள் அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர். எனவே, ரெயில் நிலையத்தில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரஜீஸ், குழித்துறை.

மின்கம்பத்தை மாற்ற வேண்டும்

திங்கள்நகரில் அரசு பஸ் பணிமனை எதிரே தனியார் வெல்டிக் கடையின் அருகில் ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் கழிவுநீர் ஓடைக்குள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், கழிவுநீர் வடிதோட வழியில்லாமல் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே, கழிவுநீர் ஓடையில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தை அகற்றி சாையோரத்தில் நடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுஜா பாலு, திங்கள்நகர்.

சாலை சீரமைக்கப்படுமா?

முட்டத்தில் லைட்கவுஸ் சர்ச் சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், மழை நேரங்களில் பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெகன் பிரபு, முட்டம்.

சேதமடைந்த நிழற்குடை

தோவாளை தாலுகாவுக்கு உட்பட்ட திட்டுவிளை அருகில் மணத்திட்டையில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடை சேதமடைந்து சிெமண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்தும், கூரையின் மீது செடிகள் வளர்ந்தும் காணப்படுகிறது. இதனால், பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள், பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சேதமடைந்த நிழற்குடையை அகற்றி விட்டு, புதியை நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஸ்ரீபரிஷீத், பூதப்பாண்டி.

மரத்தை அகற்ற வேண்டும்

தக்கலையில் இருந்து பத்மநாபபுரம் செல்லும் சாலையில் வள்ளியாற்று பாலம் அருகில் பழமையான ஆலமரம் ஒன்று உள்ளது. பத்மநாபபுரம் கோட்டை சுவரையொட்டி மேடான பகுதியில் நிற்கும் இந்த மரத்தின் வேர்கள் எந்தவித பிடிமானமும் இல்லாமல் நிற்கிறது. இதன் கீழ்பகுதி பள்ளமாக உள்ளதால் பேரிடர் காலங்களில் மரம் சாய்ந்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஆபத்தான நிலையில் நிற்கும் இந்த மரத்தை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முகமதுராபி, பத்மநாபபுரம்.


Next Story