புகார் பெட்டி
புகார் பெட்டி
ஆபத்தான நிழற்குடை
தம்பத்துகோணம் அரசு நடுநிலைப்பள்ளி அருகில் உள்ள பயணிகள் நிழற்குடையின் மேற்கூரை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அங்கு பஸ் ஏற வரும் பயணிகள், பள்ளி மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த நிழற்குடையை அகற்றி விட்டு புதிய நிழற்குடையை அமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முத்து, கோட்டார்.
சேதமடைந்த மின்கம்பம்
அழகப்பபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட புன்னார்குளம் சந்திப்பில் இருந்து அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாைலயோரத்தில் அமைக்கப்பட்டுள்ள 2 மின்கம்பங்கள் முறிந்து விழுந்து கிடக்கிறது. மின்கம்பிகளும் அகற்றப்படாமல் சாலையோரத்தில் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த மின்கம்பங்களையும், கம்பிகளையும் உடனடியாக அகற்றி புதிய கம்பங்களை நடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜஸ்டின், அழகப்பபுரம்.
நாய்கள் தொல்லை
நாகர்கோவில் புன்னை நகரில் இருந்து பொன்னப்பநாடார் காலனிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. அவை அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகளை விரட்டுவதும், கடிக்கவும் வருகின்றன. இதனால், சாலையில் செல்லும் பொதுமக்கள் பெரும் அச்சத்துடனேயே அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி நாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அம்ஷாமேரி, புன்னைநகர்.
எரியாத மின்விளக்கு
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வேதநகர் பள்ளியில் இருந்து கன்னங்குளம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பத்தில் விளக்கு பழுதடைந்து எரியாமல் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி பழுதடைந்த மின்விளக்கை அகற்றி விட்டு புதிய விளக்கை பொருத்தி எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆன்றோ டெகோசிங் ராஜன், வேதநகர்.
நடவடிக்கை ேதவை
நாகர்கோவில் கோட்டார் சவேரியார் ஆலய சந்திப்பில் இருந்து செட்டிகுளம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் அமைக்கப்பட்டுள்ள பல மின்கம்பங்களில் விளக்குகள் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பழுதடைந்த விளக்கை அகற்றி விட்டு புதிய மின்விளக்கை பொருத்தி எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராசிக், கோட்டார்.
மாயமான பெயர் பலகை
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆயுதப்படை மைதான சாலையில் இருந்து பூங்கா செல்லும் சாலை உள்ளது. இந்த சாலைக்கு செல்வதற்கான வழிகாட்டி பலகை அங்கு அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது, கம்பிகள் மட்டும் உள்ளது. அதனுடன் இணைக்கப்பட்டிருந்த பெயர்பலகையை காணவில்லை. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையின் பெயர்பலகை புதிதாக அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சாய், பாவலர் நகர்.