தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

புகார் பெட்டி

சிவகங்கை

கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் இருந்து மதுரை பெரியார் பஸ் நிலையத்திற்கு மதிய வேளையில் குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் இயக்கப்படும் பஸ்களில் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் பயணிகள் பலர் அடுத்த பஸ் வரும் வரை நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.எனவே இந்த பகுதிகளுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கணேசன், திருப்புவனம்.

விபத்து ஏற்படுத்தும் நாய்கள்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அண்ணாநகர் பகுதியில் நாய்கள் சாலையில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. நாய்கள் துரத்துவதால் பலர் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். நாய் கடியால் தினமும் பலர் பாதிக்கப்படும் நிலை உள்ளது. மேலும் நாய்கள் வாகனங்களின் குறுக்கே பாய்வதால் சிறு, சிறு விபத்துகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், காரைக்குடி.

மாணவர்கள் அவதி

சிவகங்கை மாவட்டம் கல்லாராதினிப்பட்டி, கீழப்பூங்குடி ஆகிய கிராமங்களில் போதுமான அளவு பஸ்கள் இயக்கப்படுவது இல்லை. இப்பகுதி மக்கள் நீண்டநேரம் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் இயக்கப்படும் பஸ்களிலும் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் அவதிப்படுகின்றனர். எனவே இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கல்லாராதினிபட்டி.

நடைபாதை ஆக்கிரமிப்புகள்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பஜார் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடைபாதையை ஆக்கிரமித்து சிலர் கடைகள் வைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அவ்வழியே நடந்து செல்ல மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமநாதன், காரைக்குடி.

சேறும் சகதியுமான சாலை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில் வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்துமிடத்தில் சாலை சேதமடைந்து மழை காலங்களில் சேறும், சகதிமாக இருப்பதால் டிரைவர்கள் கடும் சிரமம் அடைகின்றனர். எனவே இந்த பகுதி சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவா, காரைக்குடி.


Next Story