தினத்தந்தி புகார்பெட்டி
புகார்பெட்டி
அனுமதியின்றி மண் சுரண்டல்
மதுரை மாவட்டம் டி.கிருஷ்ணபுரம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அனுமதியின்றி மண் சுரண்டப்படுகிறது. சம்பந்தப் பட்ட அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செல்வம், டி.கிருஷ்ணபுரம்.
பாலத்தில் ஆக்கிரமிப்பு
மதுரை மாவட்டம் சோழவந்தான் தென்கரை இணைப்பு காமராஜர் பாலத்தில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களை நிறுத்தி வருகிறார்கள். இதனால் இந்த பாலத்தை கடந்து செல்ல வாகனஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பாலத்தில் நிறுத்தும் வாகனங்களை அப்புறப்படுத்தி வாகனஓட்டிகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
ராஜ்சுந்தர், சோழவந்தான்.
சேதமடைந்த சாலை
மதுரை மாவட்டம் வில்லாபுரத்தில் தனியார் பள்ளி எதிரில் உள்ள ரோடு சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள், பொதுமக்கள், பள்ளி முடிந்து வீடு திரும்பும் மாணவர்கள் சிரமப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
கண்ணன், வில்லாபுரம்.
வழிகாட்டி பலகைகள் தேவை
மதுரை மாநகரின் பிரிவு சாலைகளில் வழிகாட்டி பலகைகள் குறைவாகவோ, இல்லாமலோ இருக்கின்றன. இதனால் இரவில் மதுரையை கடக்கும் வாகனங்கள் வழி விசாரிக்க முடியாமல் தவிக்கும் நிலை உள்ளது. எளிதாக அடையாளம் காணும் வழிகாட்டி பலகைகள் அமைக்கப்படுமா?
பொன் சரவணன், வில்லாபுரம்.
நடவடிக்கை தேவை
மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதல்-அமைச்சர் மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை எடுக்கும் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த மையத்தை சரியான நேரத்திற்கு திறப்பது கிடையாது. இதனால் நோயாளிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் காப்பீட்டு திட்ட அட்டை வழங்க வேண்டும்.
முருகன், மதுரை.