தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

புகார் பெட்டி

மதுரை

ரேஷன் கடை வேண்டும்

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா பாண்டாங்குடி கிராமத்தில் 300 ரேஷன் கார்டுகள் உள்ளது. இங்குள்ள ரேஷன் கடை இடிந்த நிலையில் உள்ளது. இதனால் இந்த ரேஷன் கடைக்கு வரும் பொதுமக்கள் ஒருவித அச்ச உணர்வுடனே வந்து செல்கின்றனர். எனவே இந்த பகுதியில் புதிதாக ரேஷன் கடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பாண்டாங்குடி.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

மதுரை மாவட்டம் கோ.புதூர் காந்திபுரம் பாண்டியன் நகரில் சாலையில் கழிவுநீர் பல நாட்களாக தேங்கி நிற்கிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் சாலையில் நடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் தேங்கிநிற்கும் கழிவுநீரால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க வேண்டும்.

ஆனந்த்ராஜ், கோ.புதூர்.

காற்றில் பறக்கும் குப்பை

மதுரை மாவட்டம் கோசாகுளம் பகுதியல் குப்பைகளை வண்டியின் மேல் இருந்து கொட்டுவதால் குப்பைகள் காற்றில் சாலையில் பறக்கின்றன. இதனால் இந்த பகுயில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே குப்பைகள் காற்றில் பறக்காதவாறு எடுத்துச்செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கோசாகுளம்.

ஒளிராத மின்விளக்கு

மதுரை மாவட்டம் மேலக்கால் மெயின் ரோடு கோச்சடை முத்துராமலிங்கத் தேவர் ரோட்டில் உள்ள மின் விளக்கு பல நாட்களாக எரியவில்லை. இந்த பகுதியில் புதன்கிழமை வாரச்சந்தை நடைபெறுகிறது. இந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் சந்தைக்கு வரும் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என அனைவரும் அச்சப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் உள்ள மின்விளக்கை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜன், கோச்சடை.

தெரு நாய்கள் தொல்லை

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதிகளில் நாய்கள் சாலையில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்துவதால் சாலையில் நடக்கவே மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

பொதுமக்கள்,வாடிப்பட்டி.


Next Story