புகார் பெட்டி


புகார் பெட்டி
x

புகார் பெட்டி

கன்னியாகுமரி

குளத்தை தூர்வார வேண்டும்

தக்கலையில் இருந்து குலசேகரம் செல்லும் சாலையில் இலுப்பக்கோணம் அருகில் பட்டாணிக்குளம் உள்ளது. இந்த குளத்தின் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தது. மேலும், அப்பகுதி மக்களும் குளிப்பதற்கு பயன்படுத்தி வந்தனர். ஆனால், குளத்தை முறையாக பராமரிக்காததால் பாசி படர்ந்து தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், பொதுமக்கள் குளத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜி.சுரேஷ், இலுப்பக்கோணம்.

கழிப்பறை தேவை

பூதப்பாண்டி அருகே காட்டுப்புதூரில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த ஊரில் பொதுக்கழிப்பறை அமைக்கப்படவில்லை. இரவு நேரம் கடைசியாக வரும் 2 அரசு பஸ்கள் அங்கியே நிறுத்தப்பட்டு அதிகாலையில் மீண்டும் இயக்கப்படுகிறது. ஆனால், இங்கு பொதுக்கழிப்பறை இல்லாததால் டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் பொதுக்கழிப்பறை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சு.மதன், காட்டுப்புதூர்.

சேதமடைந்த மின்கம்பம்

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட டெரிக் சந்திப்பில் இருந்து ஆசாரிபள்ளம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் இருந்து இடதுபுறமாக செல்லும் ஜேக்கப் தெருவில் 286 எண் கொண்ட மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே ெதரிந்த வண்ணம் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராபின் ஐசக், ராணித்தோட்டம்.

சீரமைக்கப்படுமா?

நாகர்கோவில் கேப் ரோட்டில் பாதசாரிகள் நடந்து செல்வதற்கு வசதியாக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதையில் ஆங்காங்கே அலங்கார தரைகற்கள் சேதமடைந்து பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால், இரவு நேரத்தில் நடந்து செல்லும் பொதுமக்கள் கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, நடைபாதையில் சேதமடைந்த பகுதிகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜ்குமார், கன்னியாகுமரி.

நடவடிக்கை தேவை

குளச்சலில் பஸ்நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலையத்தை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பஸ் நிலையத்தில் உள்ள தூண்களில் சிலர் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். இதனால், பஸ்நிலையத்துக்கு வரும் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பஸ்நிலையத்தில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அகற்றுவதுடன், சுவரொட்டிகளை ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.முகம்மது சபீர், குளச்சல்.

சாலையை சீரமைக்க வேண்டும்

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பறக்கையில் இருந்து வண்டிக்குடியிருப்பு செல்லும் சாலையில் சுவிசேஷபுரம் உள்ளது. இந்த சாலையில் சுவிசேஷபுரம் முதல் பறக்கை வரை சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாவதுடன் அடிக்கடி விபத்திலும் சிக்கி வருகிறார்கள். எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அஜய், சுவிசேஷபுரம்.


Next Story