புகார் பெட்டி


புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சிவகங்கை

சாலைவசதி வேண்டும்

சிவகங்கை மாவட்டம் கல்லம்பட்டி ஊராட்சி மூவன்பட்டி கிரமத்தில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் பொதுமக்கள், வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை புதிதாக போடவேண்டும்.

நாதன், கல்லம்பட்டி.

ஆய்வு நடத்தப்படுமா?

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே அறனையூர் கிராமத்தில் தரமற்ற உணவு பொருட்கள் போலி ஸ்டிக்கர் ஒட்டி விற்கப்படுகிறது. இதனை வாங்கி பயன்படுத்தும் பொதுமக்கள், குழந்தைகள் வாந்தி, மயக்கம் போன்றவற்றால் அவதிப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் விற்கப்படும் உணவு பொருட்களை ஆய்வு செய்ய வேண்டும்.

மருதுஅழகு, இளையான்குடி.

மாசடைந்த கண்மாய்

சிவகங்கை மாவட்டம் எஸ். புதூர் அருகே கரிசல்பட்டியில் பொதுமக்கள் குடிநீர் தேவைக்காக தாமரை கண்மாயை பயன்படுத்தி வந்தனர். இந்த கண்மாயில் கழிவுகள் கலப்பதால் மாசடைந்து துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே அதிகாரிகள் மாசடைந்த கண்மாயைசீரமைக்க கழிவுநீர் கலக்காமல் தடுக்க வேண்டும்.

ஹக்கீம் பாட்சா, சிவகங்கை.

வாகன ஓட்டிகள் அவதி

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதி சாலையில் நாய்கள் அதிக அளவில் சுற்றி திரிகின்றன. இதனால் சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். மேலும் இரவுநேரங்களில் சாலையில் செல்வோரை துரத்தி சென்று கடிக்கிறது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

உஷா, திருப்பத்தூர்.

பஸ் நிலையம் அமைக்கப்படுமா?

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர் பகுதியில் அமைந்துள்ள பஸ் நிலையமானது குறுகிய நிலையில் நகருக்குள் அமைந்துள்ளது. இதனால் இந்த பஸ் நிலைய பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே வெளியூர்களுக்கு செல்லும் பஸ்களுக்கு என தனியாக பஸ் நிலையம் நகரின் வெளியே அமைக்க வேண்டும்.

பிருந்தாவன், காரைக்குடி.



Next Story