தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

புகார் பெட்டி

ராமநாதபுரம்

ஆபத்தான மின்கம்பம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கீழராமநதி கிராமத்தில் மெயின்சாலையில் உள்ள ஒரு மின்கம்பம் மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. இந்த மின்கம்பம் தற்போது விழும் நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறும் முன்பாக ஆபத்தான இந்த மின்கம்பத்தை அகற்றுவார்களா?

பொதுமக்கள் அச்சம்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் தெருநாய்கள் அட்டகாசம் அதிகமாக உள்ளது. நாய்க்கடியால் தினமும் பலர் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். வாகனங்களின் குறுக்கே நாய்கள் பாய்வதால் விபத்தும் ஏற்படுகிறது. பொதுமக்கள் நலன்கருதி நாய்களை அப்புறப்படுத்த வேண்டும்.

சுகாதார சீர்கேடு

ராமநாதபுரம் நகரில் பல பகுதிகளில் குப்பைகள் ஆங்காங்கே சாலையோரத்தில் கொட்டப்படுகின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடாகவும் உள்ளது. துர்நாற்றம் காரணமாக பொதுமக்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்கின்றனர். மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சாலையோரத்தில் குப்பைகளை ெகாட்டாமல் தடுக்கவும், குப்பைகளை முறையாக அள்ளவும் நடவடிக்கை வேண்டும்.

கண்காணிப்பு கேமரா தேவை

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். ஆனால் இங்கு கண்காணிப்பு கேமராக்கள் இல்லாதால் திருட்டு அபாயம் உள்ளது. எனவே, பஸ் நிலையம் மற்றும் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும்.

பூங்கா சீரமைக்கப்படுமா?

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் சங்குமால் கடற்கரை அருகே சிறுவர் பூங்கா உள்ளது. ஆனால் இந்த பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் சிறுவர்கள் விளையாட முடியாமல் தவிக்கின்றனர். எனவே, பூங்காவை சீரமைக்க வேண்டும்.


Next Story