புகார் பெட்டி
புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குறைந்த மின்னழுத்தம்
மதுரை மாவட்டம் விளாச்சேரி அருகே செட்டித்தெருவில் மின்கம்பிகள் சேதமடைந்து குறைந்த மின்னழுத்தம் ஏற்பட்டு வருகிறது. எனவே சேதமடைந்து காணப்படும் மின்கம்பிகளை அகற்ற வேண்டும்.
சதீஷ்குமார், விளாச்சேரி.
உடைந்த பாதாள சாக்கடை மூடி
மதுரை மாவட்டம் வடக்கு தொகுதி வ.உ.சி. 1-வது தெருவில் பாதாள சாக்கடை மூடியானது உடைந்து கழிவுநீரானது வெளியேறுகிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அபுபக்கர், மீனாம்பாள்புரம்.
பஸ்கள் இயக்க வேண்டும்
மதுரை மேற்கு கோச்சடை பஸ் நிறுத்தத்தில் இருந்து திருப்பரங்குன்றத்திற்கு பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே இந்த வழித்தடத்தில் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜன், கோச்சடை.
சேதமடைந்த சாலை
மதுரை மேலஅனுப்பானடி ஐெ.ஐெ. நகர் மற்றும் சரவணாநகர் பகுதி சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
பொதுமக்கள், மேலஅனுப்பானடி.
தார்ச்சாலை அமைக்கப்படுமா?
மதுரை மாவட்டம் சிந்தாமணி89-வது வார்டு காமாட்சியம்மன் கோவில் தெருவின் சாலை மண் சாலையாக காட்சியளிக்கிறது. இந்த சாலையை தார்ச்சாலையாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சங்குபாண்டி, சிந்தாமணி.