புகார் பெட்டி


புகார் பெட்டி
x

புகார் பெட்டி

கன்னியாகுமரி

சாலை சீரமைக்கப்படுமா?

நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் இருந்து பருத்திவிளைக்கு செல்லும் குறுக்குச்சாலையில் வசந்தம் நகர் உள்ளது. இந்த பகுதியில் சாலையில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. அதன்பிறகு சாலை சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலை சீரமைக்கப்படுமா?.

-சேவியர், வசந்தம்நகர்.

சேதமடைந்த மின்கம்பம்

அழகப்பபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 15-வது வார்டில் எக்ஸ் பெதித் 2-வது தெரு உள்ளது. இந்த தெருவில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த வண்ணம் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பாதசாரிகள் நலன்கருதி சேதமடைந்த கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை நடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.ஜார்ஸ் மலர்கொடி, அழகப்பபுரம்.

நடவடிக்கை தேவை

செண்பகராமன்புதூர் கங்கை பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகில் அந்த பகுதியில் சேகரிக்கும் குப்பைகளை கொட்டி வருகின்றனர். ஆனால், அவற்றை முறையாக அகற்றாததால் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, குப்பைகளை உடனுக்குடன் அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராமன், செண்பராமன்புதூர்.

சுகாதார சீர்கேடு

பேச்சிப்பாறை அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் குலசேகரம், சுருளோடு வழியாக பார்வதிபுரத்துக்கு அனந்தனார் கால்வாய் மூலம் வருகிறது. இந்த கால்வாயில் சிலர் இறைச்சி கழிவுகளை கொட்டுகின்றனர். இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், கால்வாயில் குளிக்கும் மக்களுக்கும் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கால்வாயில் இறைச்சி கழிவுகளை கொட்டுவதை தடுத்து தண்ணீர் சுகாதாரத்தை காக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விஜயகுமார், அருமநல்லூர்.

விபத்து அபாயம்

நாகர்கோவில் கோட்டார் சவேரியார் சந்திப்பில் இருந்து செட்டிகுளத்துக்கு புதிய தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் பல இடங்களில் பாதாள சாக்கடை குழாயின் மூடி அமைக்கப்பட்டுள்ள பகுதி சாலை மட்டத்தை விட உயரமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதிகளில் சாலையின் மட்டத்தை சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆன்றோ டெகோசிங் ராஜன், வேதநகர்.

வாகன ஓட்டிகள் அவதி

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வலம்புரிவிளை குப்பை கிடங்கிற்கு எதிரே ஈத்தாமொழி சாலைக்கு செல்லும் குறுக்கு சாலை உள்ளது. இந்த சாலையின் தொடக்கத்தில் கழிவுநீர் ஓடை பாலத்துக்கும், சாலைக்கும் இடையே போடப்பட்டிருந்த கான்கிரீட் தளம் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக ெசல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி சேதமடைந்த பகுதியை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சூர்யா, புதூர்.


Next Story