புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கால்நடைகள் தொல்லை
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் சாலையில் கால்நடைகள் அதிக அளவில் நடமாடுகின்றன. இதனால் வாகனஓட்டிகள் சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இங்கு சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், காளையார்கோவில்.
வாகன ஓட்டிகள் சிரமம்
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் கிராமத்தில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் இப்பகுதி பொதுமக்கள், வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
மனோகர், எஸ்.புதூர்.
போக்குவரத்து நெரிசல்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சாலைகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் சாலைகளில் பயணிக்கும் வாகனஓட்டிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாமல் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்து நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மணிவண்ணன், காரைக்குடி.
சேதமடைந்த சாலை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராம பகுதிகளில் சில இடங்களில் உள்ள சாலை பெயர்ந்து மேடு, பள்ளமாக காட்சியளிக்கிறது. சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் மழை காலங்களில் சாலையில் பயணிப்பது மிகுந்த சிரமமாகவே உள்ளது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கார்த்திக், திருப்புவனம்.
சுகாதார சீர்கேடு
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா கொங்கம்பட்டி கிராமத்திற்கு செல்லும் வழியில் குப்பைகள் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது. இந்த சாலையை கடந்து செல்லும் போது துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் தேங்கிய குப்பைகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழனிசாமி, இளையான்குடி.