தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

புகார் பெட்டி

ராமநாதபுரம்

எரியாத தெருவிளக்குகள்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் பனைக்குளம் 10-வது வார்டு பகுதியில் உள்ள தெருவிளக்குகள் சில நாட்களாக எரியவில்லை. இதனால் இந்தபகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த பகுதி மக்கள் இரவு நேரங்களில் வீட்டைவிட்டு வெளியே செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் உள்ள தெருவிளக்குகளை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குண்டும் குழியுமான சாலை

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே தேரங்குளம் கிராமத்தில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் தடுமாறுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சரிசெய்ய வேண்டும்.

சேதமடைந்த சாலை

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி செல்லும் சாலை சேதமடைந்த நிலையில் காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த இந்த சாலையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாகன ஓட்டிகள் அவதி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியிலிருந்து உரக்குழி செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இந்த சாலையில் வாகனங்கள் செல்வதால் பழுதாகி விடுகின்றன. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்மாய் தூர்வாரப்படுமா?

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா சுவாத்தான் கிராமத்தில் உள்ள கண்மாய் தூர்வாரப்படாமல் கருவேல மரங்கள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த கண்மாயை பயன்படுத்தி வந்த பொதுமக்கள், விவசாயிகள் தண்ணீர் தட்டுப்பாட்டால் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கண்மாயை தூர்வார வேண்டும்.


Next Story