புகார் பெட்டி
புகார் பெட்டி
சுகாதார சீர்கேடு
நாகர்கோவில் அறுகுவிளை திருவள்ளுவர் தெரு உள்ளது. இந்த தெருவில் அமைக்கப்பட்டுள்ள டிரான்ஸ்பார்மர் அருகில் சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்றுவதுடன், அங்கு குப்பைகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விஜய், அறுகுவிளை.
சேதமடைந்த சிமெண்டு கற்கள்
கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரெயில்வே தண்டவாளம் சந்தையடி வழியாக செல்கிறது. சந்தையடி ஊருக்கு வரும் சாலை தண்டவாளத்தின் குறுக்கே செல்கிறது. இந்த பகுதிகளில் தண்டவாளத்தின் இரு பக்கமும் பதிக்கப்பட்டுள்ள சிமெண்டு கற்கள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தண்டவாளத்தை கடக்கும் போது பெரும் சிரமத்துக்குள்ளாவதுடன் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த சிமெண்டு கற்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சி.ராம்தாஸ், சந்தையடி.
சாலை சீரமைக்கப்படுமா?
ராஜாக்கமங்கலம் அளத்தங்கரையில் வடக்கு தெரு உள்ளது. இந்த தெருவில் அமைக்கப்பட்டுள்ள சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கார்த்திக், அளத்தங்கரை.
நடவடிக்கை தேவை
நாகர்கோவில் டெரிக் சந்திப்பு, கலெக்டர் அலுவலக சந்திப்பு, பால்பண்ணை சந்திப்பு ஆகிய வழித்தடத்தில் ஏராளமான அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. சில பஸ்கள் அந்ததந்த பஸ்நிறுத்தத்தில் சாலையோரமாக நிறுத்தாமல், நடு சாலையில் பஸ்சை நிறுத்தி பயணிகளை இறக்கி விடுகின்றனர். இதனால், பின்னால் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பஸ்நிறுத்தத்தில் சாலையோரமாக பஸ்சை நிறுத்தி பயணிகளை இறக்கிவிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெயராம், ராமவர்மபுரம்.
வீணாகும் குடிநீர்
ராஜாக்கமங்கலம் எள்ளுவிளையில் அமைந்துள்ள கோவிலின் அருகில் உள்ள குடிநீர் குழாயின் வால்வு சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், குடிநீர் வீணாக அருகில் உள்ள தென்னந்தோப்பில் பாய்ந்து கொண்டிருக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த வால்வை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்.
- கோ.ராஜேஷ் கோபால், மணவாளக்குறிச்சி.
மாற்றியமைக்க வேண்டும்
வேர்க்கிளம்பி பஞ்சாயத்துக்கு உட்பட்ட முண்டவிளை உள்ளது. இந்த பகுதியில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் ஓடைக்குள் மின்கம்பம் நடப்பட்டுள்ளது. இதனால், மழைநீர் வடிந்தோட வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஓடையில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பதை அகற்றி வேறு இடத்தில் நடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முரளி, முண்டவிளை.