புகார் பெட்டி


புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சிவகங்கை

நோய் பரவும் அபாயம்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி நகர் சாலையோரங்களில் குப்பைகள் அதிக அளவில் குவிந்து கிடக்கிறது. இதனால் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய்தொற்று பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?

கார்த்திகேயன், சிங்கம்புணரி.

நடவடிக்கை எடுக்கப்படுமா?

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தாலுகா பொருசடி உடைப்பு பஸ் நிறுத்தத்தில் தொலைதூர பஸ்கள் நின்று செல்வது இல்லை. இதனால் இப்பகுதியிலிருந்து வெளியூருக்கு படிக்க செல்லும் மாணவர்கள் வேலைக்கு செல்வோர் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே அனைத்து பஸ்களும் இந்த பஸ் நிறுத்தத்தில் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், காளையார்கோவில்.

கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு

சிவகங்கை மாவட்ட பகுதியில் ஏராளமான கண்மாய்கள் உள்ளன. இந்த கண்மாய்களே விவசாயிகளின் அடிப்படை நீர் ஆதாரமாக உள்ளது. தற்போது சில கண்மாய்கள் கருவேல மரங்களால் அதிக அளவில் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. இதனால் கண்மாயில் நீர்வளம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே கண்மாயில் உள்ள கருவேல மரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அஜித்குமார், சிவகங்கை.

ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா இளையாத்தங்குடி தெற்கு சத்திரன்பட்டி கிராமத்தில் உள்ள கல்பாண் ஊரணியை தனிநபர் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாண்டியன், திருப்பத்தூர்.

நாய்கள் தொல்லை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 34-வது வார்டு செஞ்சை பாப்பாஊரணி பகுதியில் நாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது, மேலும் இந்த நாய்கள் இவ்வழியே செல்லும் பள்ளி குழந்தைகளை கடிக்க செல்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே இந்த நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேகர், காரைக்குடி.



Next Story