புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
விபத்து அபாயம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து வேங்கிட்டன்குறிச்சி செல்லும் சாலையின் சில இடங்கள் சேதமடைந்து காணப்படுகிறது. சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேலும் வாகனஓட்டிகள் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரமேஷ், முதுகுளத்தூர்.
நடவடிக்கை தேவைராமநாதபுரம் நகர் பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலாஜி, ராமநாதபுரம்.
சேதமடைந்த மின்கம்பம்
ராமநாதபுரம் குந்துகால் கடற்கரையில் உள்ள ஆழ்கடல் மீன்பிடி துறைமுகம் பகுதியில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். மேலும் மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து காணப்படுகிறது. எனவே மின்கம்பத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மகேஷ், ராமநாதபுரம்.
நோய் பரவும் அபாயம்
ராமநாதபுரம் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நாய்கள், பன்றிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. தெருக்களில் சுற்றித்திரியும் பன்றிகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் வாய்ப்பு உள்ளது. மேலும் நாய்கள் துரத்துவதால் இப்பகுதியினர் காயம் அடைகின்றனர்.எனவே இவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோபி, ராமநாதபுரம்.
சீரமைக்கப்படுமா?ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா கூகுடி ஊராட்சி விசும்புர் வடக்கு குடியிருப்புக்கு செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. சாலையில் பயணிப்பதால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதனால் வாகனஓட்டிகள் சிலர் மாற்று பாதையில் பல கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த சாலை சீரமைக்கப்படுமா?
விஜய், திருவாடானை.