புகார் பெட்டி
புகார் பெட்டி
சாலையில் ஓடும் கழிவுநீர்
தென்காசி மாவட்டம் கடையம் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகில் சாலையோரம் உள்ள வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. இதனால் அந்த பகுதியில் செல்லும் மக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே வாறுகாலில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
-கோதர்மைதீன், முதலியார்பட்டி.
நிரந்தர ரேஷன்கடை வேண்டும்
மேலாம்பூர் பஞ்சாயத்து கருத்தப்பிள்ளையூர் அண்ணாநகர் பகுதியில் கீழாம்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் நடமாடும் ரேஷன் கடை தற்காலிகமாக இயங்கி வருகிறது. அண்ணாநகருக்கு நிரந்தர ரேஷன்கடை அமைக்க வேண்டும்.
-கிறிஸ்டோபர், கருத்தப்பிள்ளையூர்.
தெருவிளக்குகள் எரியவில்லை
கடையம் யூனியன் சேர்வைக்காரன்பட்டி பஞ்சாயத்து தனியார் வங்கி அருகே மெயின்ரோட்டில் உள்ள பல தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் இந்த பகுதிகள் இருளில் மூழ்கி காணப்படுகிறது. வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே இதில் நடவடிக்கை எடுத்து தெருவிளக்குகள் எரிய செய்ய வேண்டுகிறேன்.
-திருக்குமரன், கடையம்.
சாய்ந்த மின்கம்பம்
சாம்பவர் வடகரை (கீழுர்) தேரடி அருகில் மெயின்ரோட்டில் மின்கம்பம் சேதம் அடைந்தது. இதனால் வேறு மின்கம்பம் நட்டினார்கள். தற்போது அந்த மின்கம்பம் சாய்ந்து நிற்கிறது. அபாயகரமான மின்கம்பத்தை சீரமைக்க வேண்டுகிறேன்.
-அய்யங்கண்ணு, சாம்பவர்வடகரை.
கர்ப்பிணிகள் அவதி
ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு செவ்வாய்க்கிழமைதோறும் ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக ஸ்கேன் பரிசோதனை செய்யப்படவில்லை. இதனால் இங்கு வருகிறவர்கள் தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கும், வி.கே.புதூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கும் பரிசோதனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் கர்ப்பிணிகள் அவதிப்படுகிறார்கள். எனவே மீண்டும் கர்ப்பிணிகள் வாரந்தோறும் ஸ்கேன் பரிசோதனை செய்ய உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆறுமுகராஜ், ஆலங்குளம்.