தினத்தந்தி புகார் பெட்டி
புகார் பெட்டி
பொதுமக்கள் அவதி
சிவகங்கை நகர் மற்றும் புறநகர் பகுதியில் சமீப காலமாக கொசுத் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கர்ப்பிணிகள், முதியோர்கள், குழந்தைகள் சரிவர தூக்கமின்றி அவதியடைகின்றனர். எனவே நகரின் அனைத்து பகுதிகளிலும் அவ்வப்போது கொசு மருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவா, சிவகங்கை.
விபத்து அபாயம்
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதிகளில் செல்லும் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். சிறு, சிறு விபத்துகளும் நடந்து வரும் இப்பகுதி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாபு, காளையார்கோவில்.
உடைந்த கழிவுநீர் கால்வாய்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி போலீஸ் காலனி மேற்கு பகுதி-அண்ணாநகர் பிரதான சாலையில் செல்லும் கழிவுநீர் கால்வாயானது உடைந்து கழிவுநீரானது வெளியேறி வருகிறது. இதனால் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அவ்வழியாக செல்லும் மக்கள் மிகவும் சிரமம் அடைகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைக்க வேண்டும்.
முருகன், காரைக்குடி.
நோயாளிகள் சிரமம்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை சரியான முறையில் பராமரிக்காததால் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகிறது. இதனால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் கொசுக்கடியால் சிரமப்படுகிறார்கள். எனவே அதனை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரோகன்நிக்கோலஸ், திருப்பத்தூர்.
மின்மாற்றி அமைக்கப்படுமா?
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி தாலுகா வாணி ஊராட்சிக்கு உட்பட்ட சுந்தனேந்தல் கிராமத்தில் குறைந்த அழுத்த மின்வினியோகத்தால் இப்பகுதி மக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இங்கு புதிய மின்மாற்றி அமைத்து சீரான மின்வினியோகத்தை ஏற்படுத்த வேண்டும்.
ஜென்சிலின், இளையான்குடி.