புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 10 Oct 2022 12:15 AM IST (Updated: 10 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சிவகங்கை

சுகாதார சீர்கேடு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கோட்டை பகுதியில் வீட்டில் இருந்து கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி கிடையாது. இதனால் இந்தப்பகுதியில் சாலையில் கழிவுநீரானது தேங்கி அப்பகுதியின் சுகாதாரத்தை கெடுக்கிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதுடன் அப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி அமைக்க வேண்டும்.

உச்சிமாகாளி, திருப்புவனம்.

குடிநீர் தட்டுப்பாடு

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் சரிவர இல்லை. இதனால் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் சீரான முறையில் குடிநீர் வினியோகிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

மணி, எஸ்.புதூர்.

தடுப்புச்சுவர் வேண்டும்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே திருவள்ளூர் கிராமத்தில் உள்ள கண்மாய்களில் தடுப்புச்சுவர் கிடையாது. இதனால் இப்பகுதி மக்கள் ஆபத்துடன் இப்பகுதியை கடந்து வருகிறார்கள். மேலும் மாலை வேளைகளில் குழந்தைகள் இப்பகுதியை கடக்க அச்சப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்.

சண்முக வேலாயுதம், இளையான்குடி.

பொதுமக்கள் அவதி

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்கள் கூட்டம் கூட்டமாக அதிக அளவில் சுற்றி திரிகின்றன. மேலும் சில நாய்கள் காயங்களுடன் திரிகின்றன. இதனால் ரேபிஸ் போன்ற நோய்கள் பரவவும் வாய்ப்புள்ளது. எனவே இந்த நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், இளையான்குடி.

வீணாகும் குடிநீர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே தென்மாபட்டில் காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. எனவே இந்த குழாய் உடைப்பை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேதுராமன், தென்மாபட்டு.


Next Story