புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 13 Oct 2022 12:15 AM IST (Updated: 13 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சிவகங்கை

ஆக்கிரமிப்பு

சிவகங்கை மாவட்டம் இடையமேலூர் ஊராட்சி வேலாங்கப்பட்டி கிராமத்தில் சுடுகாட்டிற்கு அருகில் உள்ள புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு நிறைந்துள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த ஆக்கிரமிப்பை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் அருகில் உள்ள சுடுகாடு மற்றும் இடுகாட்டை சீரமைத்து தரவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குண்டும், குழியுமான சாலை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி-மறவமங்கலம் மாநில நெடுஞ்சாலையில் கீழத்துறையூரிலிருந்து மேலத்துறையூர் செல்லும் சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் சாலையில் பயணிக்க வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாலையில் செல்லும் கழிவுநீர்

சிவகங்கை மாவட்டம் வாணியங்குடி ஊராட்சி அண்ணாநகர் மெயின்ரோட்டில் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே சாலையில் கழிவுநீர் செல்வதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து மதுரைக்கு மதிய வேளைகளில் குறிப்பிட்ட அளவே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் பஸ்களில் கூட்டம் அலைமோதுகிறது. காத்திருந்து பயணிப்பதால் பொதுமக்களின் அன்றாட வேலைகள் பாதிக்கப்படுகிறது. எனவே இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுகாதார சீர்கேடு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர் பகுதியில் சில இடங்களில் குப்பைகள் சூழ்ந்து காணப்படுகிறது. தேங்கிய குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தேங்கிய குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாலை வசதி வேண்டும்

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தாலுகா கொல்லங்குடி கிராமத்தின் சில பகுதியில் சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும். மழை காலங்களில் சாலையில் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Next Story