புகார்பெட்டி


புகார்பெட்டி
x
தினத்தந்தி 20 Oct 2022 12:15 AM IST (Updated: 20 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சிவகங்கை

சேதமடைந்த பள்ளி கட்டிடம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா மடப்புரம் ஊராட்சி வைகைவடகரை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் சேதமடைந்து உள்ளது. மேலும் மழைக்காலங்களில் மழைநீர் வகுப்பறையின் உள்ளே கசிந்து தேங்கி நிற்கிறது. இதனால் இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் சேதமடைந்த கட்டிடத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை விரைவாக சீரமைக்க வேண்டும்.

கார்த்திகேயன், மடப்புரம்.

தொற்றுநோய் பரவும் அபாயம்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா சண்முகநாதபுரம் ஊராட்சி மேற்கு 2-ம் வீதியில் மழைநீர் செல்ல வழியின்றி குளம் போல் தேங்கிநிற்கிறது. தேங்கி நிற்கும் மழைநீரிலிருந்து கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி இந்த பகுதியில் உள்ளவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் மழைநீர் தேங்குவதை தடுக்க வேண்டும்.

பொதுமக்கள், சண்முகநாதபுரம்.

வீணாகும் நீர்

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை பூதகுடி கண்மாய் மடையில் ஓட்டை ஏற்பட்டு தண்ணீர் கசிந்து வீணாக வெளியேறி வருகிறது. இந்த கண்மாய் நீர் இப்பகுதி விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமாகவும், குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. எனவே கண்மாயின் மடையில் ஏற்பட்ட கசிவை சரிசெய்து நீர் இருப்பை அதிகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரபு, நாட்டரசன்கோட்டை.

நடவடிக்கை தேவை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் பாரதிதாசன் தெருவில் உள்ள தெருவிளக்குகள் சுவிட்ச் போர்டு பழுதினால் கடந்த ஒரு வார காலமாக இரவு, பகலாக எரிந்து கொண்டு இருக்கிறது. இதனால் மின்சாரம் வீணாகிக் கொண்டிருக்கிறது. எனவே பழுதான சுவிட்ச் போர்டை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சரவணன், கழனிவாசல்.

ஆபத்தான பயணம்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை- காரைக்குடி சாலையில் இயங்கும் அரசு பஸ்களில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணிக்கின்றனர். சில மாணவர்கள் ஆபத்தை உணராமல் பஸ்சின் படிக்கட்டில் நின்றபடி பயணிக்கின்றனர். இதனால் பயணிகள், நடத்துனர், ஓட்டுனர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே ஆபத்தான படிக்கட்டு பயணத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலாஜி, தேவகோட்டை.


Next Story