தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

புகார் பெட்டி

மதுரை

சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள்

மதுரை காமராஜர் சாலையில் சிலர் தங்கள் இருசக்கர வாகனங்களை சாலையில் நிறுத்தி செல்கின்றனர். இதனால் வாகனஓட்டிகள் சாலையில் பயணிக்க முடியாமல் அவதியடைகின்றனர். மேலும் நடக்க பாதையின்றி பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே வாகனங்களை சாலையில் நிறுத்துவதை தவிர்க்க வாகனஓட்டிகள் முன்வர வேண்டும்.

மோகன், மதுரை.

சாக்கடையில் அடைப்பு

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் 87-வது வார்டு மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு 8-வது சந்தில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் கழிவுநீர் கசிந்து சாலையில் வெளியேறி வருகிறது. தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடையில் உள்ள அடைப்பை சரிசெய்ய சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், திருப்பரங்குன்றம்.

நாய்கள் தொல்லை

மதுரை மாவட்டம் மேலஅனுப்பானடி- சரவணாநகர் செல்லும் வழியில் தெருநாய்கள் அதிக அளவில் சாலையில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்துவதால் பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் நாய்கடியால் சிலர் அவதியடையும் நிலையும் உள்ளது. எனவே மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மணிகண்டன், மேலஅனுப்பானடி.

ஒளிராத தெருவிளக்கு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் பெரிய இலந்தைகுளம் கிராமத்தில் மந்தை திடல் முதல் மயானம் செல்லும் வழி வரை உள்ள தெரு விளக்குகள் சரியாக எரியவில்லை. இதனால் சாலை முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே எரியாத தெருவிளக்குகளை மாற்றி புதிய தெருவிளக்குகள் அமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கார்த்திக், பெரிய இலந்தைகுளம்.

கொசு தொல்லை

மதுரை மாவட்டம் வில்லாபுரம் பராசக்தி நகர், குறிஞ்சி தெருவில் சாலையில் கழிவுநீர் தேங்கி கொசுத் தொல்லை அதிகமாக உள்ளது. கொசுக்கடியால் இப்பகுதி மக்கள் அவதியடைகின்றனர். மேலும் மலேரியா, சிக்கன்குனியா போன்ற தொற்றுநோய்களும் பரவும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் கொசுமருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பூர்ணிமா, வில்லாபுரம்.

நடவடிக்கை எடுப்பார்களா?

மதுரை மாவட்டம் பந்தடி பகுதியில் குரங்குகளின் தொல்லை தற்போது அதிகரித்து வருகிறது. குரங்குகளால் பெண்கள், சிறுவர்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் குரங்குகள் வீட்டில் உள்ள அத்தியாவசிய பொருட்களை எடுத்து செல்கிறது. எனவே இந்த குரங்குகளை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்ணன், பந்தடி.

வேகத்தடை வேண்டும்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் வாகனஓட்டிகள் சிலர் அதிக வேகத்தில் சாலையில் பயணிக்கின்றனர். இந்த பாதையில் பள்ளி செயல்படுவதால் சாலையை கடக்கும்போது மாணவிகள் அச்சமடைகின்றனர். எனவே இந்த சாலையில் வேகத்த்தடை அமைத்து வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜாராம், உசிலம்பட்டி.

போக்குவரத்து நெரிசல்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சாலையில் காலை, மாலை வேளையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் அவதியடைகின்றனர். போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகனஓட்டிகள் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அஜித், திருப்பரங்குன்றம்.

சுகாதார சீர்கேடு

மதுரை மாவட்டம் நகர் மற்றும் கிராமப்புற பகுதிகளில் சில இடங்களில் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடுடன் காணப்படுகிறது. மேலும் இவ்வாறு காணப்படும் குப்பைகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகள் சேர்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சக்திவேல், மதுரை.

நிரம்பி வழியும் சாக்கடை

மதுரை பழங்கானத்தம் அன்புநகர் முல்லை வீதியில் பாதாள சாக்கடை நிரம்பி கழிவுநீர் சாலையில் வெளியேறி வருகிறது. சாலையில் தேங்கிய கழிவுநீரால் வாகனங்கள் பயணிக்க, பாதசாரிகள் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தேங்கிய கழிவுநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடையை அவ்வப்போது சுத்தப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

கோமதிராஜ், மதுரை.


Next Story