புகார் பெட்டி


புகார் பெட்டி
x

புகார் பெட்டி

மதுரை

சாலை சீரமைக்கப்படுமா?

மதுரை மாவட்டம் கோச்சடை காளை அம்பலக்காரர் தெருவில் உள்ள சாலை சேதமடைந்து உள்ளது. மழைக்காலங்களில் சாலையில் பெரியோர், சிறுவர்கள் பயணிக்க முடியாத வகையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜன், மதுரை.

நடவடிக்கை தேவை

மதுரை மாவட்டம் காமராஜர் சாலை கீழ வாசல் விளக்குத்தூண் சந்திப்பில் இருபுறமும் பள்ளங்கள் இருப்பதால் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சாலையில் செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலை ஓரத்தில் உள்ள பள்ளங்களை சரிசெய்து மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவா, மதுரை.

தெருநாய்கள் தொல்லை

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி வடக்கு ஒன்றியம் பாண்டாங்குடி கிராமத்தில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் அச்சத்துடனே வெளியே சென்றுவருகின்றனர். எனவே இந்த பகுதியில் தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பாண்டாங்குடி.

தொற்று நோய் பரவும் அபாயம்

மதுரை மாவட்டம் கிழக்கு ஒன்றியம் ராஜாக்கூரில் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் மற்றும் குப்பை தேங்கி காணப்படுகிறது. மேலும் இவற்றிலிருந்து கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்ணன், ராஜாக்கூர்.

சேதமான சாலை

மதுரை மாவட்டம் கீழ்மதுரை ரெயில் நிலையம் சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதில் பயணிப்பவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவகுமார், மதுரை.

சேறும் சகதியுமான சாலை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா கோவிலாங்குளம் ஊராட்சி கருகப்பிள்ளை காலனி பொதுமக்கள் பயன்படுத்தும் சாலை சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் சாலையை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இந்த சாலையை விரைவாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடராஜன், உசிலம்பட்டி.

குண்டும் குழியுமான சாலை

மதுரை மாவட்டம் செல்லூர்-குலமங்களம் சாலை சேறும் சகதியுமாகவும், குண்டும் குழியுமாகவும் காட்சியளிக்கிறது. மேலும் சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் உள்ளன. இதனால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையை தற்காலிகமாக சீரமைத்து விபத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அபுபக்கர், மதுரை.

ரேஷன் கடைக்கு கட்டிடம் வேண்டும்

மதுரை மாநகராட்சி 23-வது வார்டு கீழகைலாசபுரம் தாகூர் நகர் கண்மாய்க்கரை பகுதியில் சுமார் 2ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆனால் இந்த பகுதியில் ரேஷன் கடை வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. எனவே இந்த பகுதியில் ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் கட்டி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சந்தனகுமார், கீழகைலாசபுரம்.

எரியாத தெருவிளக்கு

மதுரை மாநகராட்சி 89-வது வார்டு அனுப்பானடி அம்பேத்கர் நகரில் உள்ள 5 தெருக்களில் நீண்ட காலமாக தெரு விளக்குகள் எரியவில்லை. இதனால் இந்த பகுதி முழுவதும் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக இரவு நேரங்களில் வெளியே செல்வோர் அவதிப்படுகின்றனர். எனவே எரியாத தெரு விளக்குகளை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துரைப்பாண்டியன், அனுப்பானடி.

கழிவுநீர் கால்வாய் வசதி தேவை

மதுரை மாவட்டம் அப்பன்திருப்பதி பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் மற்றும் மழைநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜா, அப்பன்திருப்பதி.


Next Story