தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

புகார் பெட்டி

ராமநாதபுரம்

நோய் பரவும் அபாயம்

ராமநாதபுரம் மாவட்டம் பெரிய பட்டண கிராமத்தில் உள்ள சாலைகளில் மழையின் காரணமாக கழிவுநீருடன் மழைநீர் தேங்கி நிற்கிறது.இதனால் துா்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உருவாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சீனி ஜலாலுதீன், பெரியபட்டிணம்.

அரசு ஆஸ்பத்திரி வேண்டும்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே காக்கூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கிடையாது. இதனால் இப்பகுதி கர்ப்பிணிகள், முதியோர்கள் மற்றும் நோயாளிகள் மருத்துவகிசிச்சைக்காக பலகிலோ மீட்டர் தூரம் உள்ள நகர் மருத்துவமனைக்கு செல்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்.

சுரேஷ், காக்கூர்.

மாசு அடையும் ஊருணி

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் திடல் பகுதியில் முறையான வாருகால் வசதி கிடையாது. இதனால் இந்தப்பகுதியில் உள்ள ஊருணியில் கழிவுநீரானது கலந்து வருகிறது. கழிவுநீர் கலந்து ஊருணி மாசடைந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் அமைத்து ஊருணியில் நீர் கலக்காத வண்ணம் தடுக்க வேண்டும்.

ரமேஷ், முதுகுளத்தூர்.

ஊருக்குள் வராத பஸ்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி-முதுகுளத்தூர் செல்லும் (2ஏ) அரசு பஸ்சானது மாலை நேரங்களில் எஸ்.காவனூருக்கு வர தாமதமாகிறது. அவ்வப்போது பஸ் வராமலேயே சென்று விடுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி முடிந்து வீடு திரும்பும் மாணவர்கள், வேலை முடிந்து வீடு திரும்புவோர் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பழனி, எஸ்.காவனூர்.

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா எஸ்.பி.பட்டினத்தில் மின்கம்பத்தில் இருந்து செல்லும் மின்கம்பிகள் தாழ்வாக அறுந்துவிழும் நிலையில் செல்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் அச்சத்துடன் இதனை கடந்து வருகிறார்கள். எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் தாழ்வானநிலையில் செல்லும் மின்கம்பிகளை அப்புறப்படுத்தி புதிய மின்கம்பி பொறுத்த வேண்டும்.

பொதுமக்கள், எஸ்.பி.பட்டினம்.


Next Story