புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 13 March 2023 12:15 AM IST (Updated: 13 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சிவகங்கை

கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

சிவகங்கை மாவட்டம் கீழடிக்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். இதன் மூலம் பிற மாவட்டத்தினரும் முன்னோர்களின் பண்பாடு, கலாசாரத்தை அறிய வாய்ப்பு ஏற்படும். எனவே இதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மணிகண்டன், சிவகங்கை.

சிமெண்டு சாலை அமைக்கப்படுமா?

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கண்டவராயன்பட்டியிலுள்ள கம்பளசாத்தப்பசெட்டியார் வீதியில் சிமெண்டு சாலை அமைக்க வேண்டும். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சிமெண்டு சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள், கண்டவராயன்பட்டி.

விபத்து அபாயம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சாலையில் சிலர் அதிக வேகத்தில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை இயக்குகின்றனர். இதனால் சாலையை கடக்கும் பாதசாரிகள், வாகனஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். மேலும் சிறு, சிறு விபத்துகளும் நிகழ்ந்து வருகிறது. எனவே வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஸ்ரீராம், காரைக்குடி.

பொதுமக்களுக்கு இடையூறு

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியில் தெருநாய்கள் சாலையில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்கள் சாலைகளில் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் நாய்கள் துரத்தும் சம்பவமும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. எனவே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மோகன்குமார், காளையார்கோவில்.

சாலை வசதி வேண்டும்

சிவகங்கை மாவட்டம் வேலாங்குடி முதல் கொன்னத்தான்பட்டி வரை சாலைகள் அமைக்க வேண்டும். இதனால் இவ்வழியாக பயணிக்கும் வாகனஓட்டிகள் மிகுந்த பயனடைவர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அருண்ராஜ், சிவகங்கை.


Next Story