தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
விபத்து அபாயம்
மதுரை மாநகர் மாட்டுத்தாவணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி சாலைகளில் மாடுகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகன், மாட்டுத்தாவணி.
பயணிகள் நிழற்குடை வேண்டும்
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் மூன்றுக்கும் மேற்பட்ட பஸ் நிறுத்தங்கள் உள்ளன.ஆனால் எந்த ஒரு பஸ் நிறுத்தங்களிலும் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை.இதனால் பயணிகள் மழை மற்றும் வெயில் காலங்களில் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே இப்பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அ.சங்கர், சோழவந்தான்.
எரியாத தெரு விளக்குகள்
மதுரை புது நத்தம் சாலை ரேஸ்கோர்ஸ் காலனியில் கலெக்டர் பங்களா முதல் தென்மண்டல காவல் துறை தலைவர் அலுவலகம் செல்லும் சாலையில் தெருவிளக்குகள் எரியாமல் உள்ளன. இரவு நேரங்களில் இருள்சூழ்ந்து காணப்படுவதால் சாலையில் நடக்க பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்குகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அருண்பிரசாத், ரேஸ்கோர்ஸ் காலனி.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
மதுரை ரைட்டன்பட்டி தெரு மாணவியர் விடுதி பின்புறம் உள்ள வாருகால் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே வாருகாலை அவ்வப்போது தூர்வார சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருப்பசாமி, மதுரை.
போக்குவரத்து நெரிசல்
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வாகனஓட்டிகள் சிரமம் அடைகின்றனர். எனவே இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகன், மதுரை.