புகார் பெட்டி


புகார் பெட்டி
x

புகார் பெட்டி

திருநெல்வேலி

குண்டும் குழியுமான சாலை

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து கொல்லம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் அடிக்கடி விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?

-மோனி, செங்கோட்டை.

* ஆலங்குளம் தாலுகா மருதம்புத்தூர் பஞ்சாயத்து கண்டப்பட்டி வழியாக இலந்தைகுளம் செல்லும் சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-ஒபேத் ஜெடி, கண்டப்பட்டி.

சாலையின் நடுவில் மின்கம்பம்

சிவகிரி 1-வது வார்டு பவுண்டு தொழு தெருவில் தபால் அலுவலகம் அருகில் சாலையின் நடுவில் மின்கம்பம் உள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. எனவே ஆபத்தான மின்கம்பத்தை சாலையோரம் மாற்றி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

-கருப்பையா, சிவகிரி.

நேரம் மாறி இயக்கப்படும் பஸ்சால் மாணவர்கள் அவதி

கடையம் யூனியன் கருத்தப்பிள்ளையூருக்கு காலை 8.30 மணிக்கு பாபநாசத்தில் இருந்து பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்த தடம் எண் 127-பி அரசு டவுன் பஸ் தற்போது நேரம் மாற்றப்பட்டு காலை 10 மணிக்கு இயக்கப்படுகிறது. இதனால் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதிய பஸ் வசதியின்றி அவதிப்படுகின்றனர். எனவே மாணவர்கள் பயன்பெறும் வகையில், பழைய கால அட்டவணைப்படி பஸ்சை இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

-கிறிஸ்டோபர், கருத்தப்பிள்ளையூர்.

பாலத்தை சூழ்ந்த முட்செடிகள்

வாசுதேவநல்லூர்- வெள்ளானைக்கோட்டை இடையில் உள்ள கருப்பையாற்று பாலத்தை மறைக்கும் அளவுக்கும் முட்செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. மேலும் பாலத்தில் குண்டும் குழியுமாகவும், தடுப்புச்சுவர் சேதமடைந்த நிலையிலும் உள்ளது. எனவே பாலத்தை சூழ்ந்த முட்செடிகளை அகற்றி, பாலத்தை சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

-பெருமாள், வாசுதேவநல்லூர்.


Next Story